`மைக்ரோவேவ் அவன்'... மணியான யூஸர் கைடு!
`மைக்ரோவேவ் அவன்'... மணியான யூஸர் கைடு! நீ ண்ட நேரம் கிச்சனில் நிற்கும் நிலையை மாற்றி, நிமிடங்கள...
https://pettagum.blogspot.com/2015/09/blog-post_34.html
`மைக்ரோவேவ் அவன்'...
மணியான யூஸர் கைடு!
நீண்ட நேரம் கிச்சனில் நிற்கும் நிலையை மாற்றி, நிமிடங்களில் சமையலை முடிக்க
கைகொடுக்கிறது `மைக்ரோவேவ் அவன்.' அதைப் பயன்படுத்துபவர்களுக்கும், வாங்க
நினைப்பவர்களுக்கும் ஏ டு இஸட் வழிகாட்டல் தகவல்கள் தருகிறார்,
எல்.ஜி.எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கோவை விநியோகஸ்தர் விற்பனைப் பிரிவின்
அதிகாரி சரவணன். ‘‘மைக்ரோவேவ் அவனில் எத்தனை வகைகள் இருக்கின்றன, அவற்றில்
தேவையானதை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது, அதை எப்படிப்
பயன்படுத்துவது, `அவன்' விஷயத்தில் செய்யக்கூடாதவை என்ன... ஒவ்வொன்றாகப்
பார்ப்போம்!’' எனும் சரவணன், அவற்றைப் பற்றி விலாவாரியாக விளக்குகிறார்...
மூன்று வகை!
“மைக்ரோவேவ் அவனில் சாப்பாடு, காய்கறிகள்,
முட்டை அவிப்பது முதல்... பிரியாணி, பிஸ்கட், கேக், தந்தூரி அயிட்டங்கள்
வரை எல்லாம் சமைக்கலாம். இதில் மூன்று வகைகள் உள்ளன. பேஸிக் சோலோ மாடல்...
பேக்கரியில் உணவுகளை சூடுபடுத்தவும், வீடுகளில் சில அடிப்படை உணவுகளை
சமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கேக், பிஸ்கட், கட்லெட், தந்தூரி போன்ற
ஃப்ரை அயிட்டங் களைச் செய்ய முடியாது.
க்ரில் மற்றும் கன்வர்ஷன் ஆகியவை மற்ற இரு
மாடல்கள். இதில் ஃப்ரை உட்பட அனைத்து வகை உணவுகளையும் தயாரிக்க முடியும்.
க்ரில் மாடலில் ஒருபுறம் ஃப்ரை ஆனதும், மறுபுறம் திருப்பி வைக்க வேண்டும்.
கன்வர்ஷன் மாடலில் எல்லா பக்கமும் ஃப்ரை ஆகும்.
இந்த இரு மாடல்களிலும் `ஆட்டோ குக்' மெனு
இருக்கும். அதாவது ஒரு பொருளை எவ்வளவு நேரம் ஃப்ரை செய்ய வேண்டும் என்பது
தெரியவில்லை என்றால், ஆட்டோ குக் மெனுவில் உணவுப் பொருளைத் தேர்வு செய்து,
அதன் எடையைக் குறிப்பிட்டுவிட்டால், அதுவே தேவையான நேரத்தில் சமைத்துக்
கொடுத்துவிடும். கட்லெட், கேக் பேக்கிங், தந்தூரி முதலிய உணவுகளை இதில்
சமைக்கலாம்.
எப்படித் தேர்ந்தெடுப்பது?
இதில் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள்... தேவை
மற்றும் பட்ஜெட். ஃப்ரை உணவுகளைச் செய்யப்போவதில்லை, ஆட்டோ குக் மெனுவும்
தேவையில்லை என்றால் பேஸிக் மாடலான `சோலோ'வைத் தேர்வு செய்யலாம்; பட்ஜெட்
அளவிலும் சிறந்தது. ஃப்ரை உணவுகளைச் செய்ய வேண்டும், அதேசமயம்
பட்ஜெட்டிலும் வேண்டும் என்றால் `க்ரில்' மாடலைத் தேர்வு செய்யலாம்.
பட்ஜெட் எல்லாம் பிரச்னை இல்லை, தேவையை முழுமையாக நிறைவுசெய்ய வேண்டும்
என்றால் `கன்வர்ஷன்' மாடலைத் தேர்வு செய்யலாம். அதிக எண்ணெய் இல்லாமல்
ஃப்ரை செய்ய விரும்புபவர்களுக்கு க்ரில் மற்றும் கன்வர்ஷன் மாடல்கள் நல்ல
சாய்ஸ்.
என்ன விலை?
பேஸிக் சோலோ மாடல் - 4 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை.
க்ரில் மாடல் - 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை.
கன்வர்ஷன் மாடல் - 9 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை.
பொதுவாக 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 26 லிட்டர் அளவுள்ள `மைக்ரோவேவ் அவன்' போதுமானது.
`அவன்' சமையலின்போது செய்யக் கூடாதவை!
மைக்ரோவேவ்
அவனில் மேக்னட்ரான் கதிர்வீச்சினால் தான் உணவுப் பொருள் சமைக்கப்படுகிறது.
`அவனுக்கு' நேராக நின்று சமைக்கும்போதோ, சமைத்த உணவுப் பொருட்களை
எடுக்கும்போதோ கதிர்வீச்சால் உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால்,
பக்கவாட்டில் இருந்துதான் `அவனை' திறக்க வேண்டும்; கையுறை (கிளவுஸ்)
அணிந்தே பொருட்களை எடுக்க வேண்டும்.
கதிர்வீச்சின்
தாக்கம் உணவுப் பொருட்களிலும் இருக்கும் என்பதால், `அவனில்' சமைத்த
உணவுகளை 3 நிமிடங்கள் கழித்துதான் சாப்பிட வேண்டும்.
வழக்கமாகச்
சமைக்கும் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் `அவனில்' ஷாக்
அடிக்கக்கூடும், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உருகிவிடக்கூடும் என்பதால்,
`அவனில்' சமைப்பதற்கான பிரத்யேகப் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
‘வாவ்’ வசதிகள்..!
வாய் அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கும் போது, `அவனில்' பால் பொங்கி வழியாது.
காய்கறிகளைத் தண்ணீர் சேர்த்து வேகவைக்கும்போது சுருங்கிப் போகாமல் நன்றாக வேகும்.
`அவனில்'
சமைக்கும்போது நேரத்தை செட் செய்துவிட்டால், குறிப்பிட்ட நேரம் வந்ததும்
அலாரம் அடித்து நினைவுபடுத்தும். சமையல் நடந்துகொண்டிருக்கும்போது, இடையில்
உணவுப் பொருட்களை அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கரண்டியைக் கொண்டு
கிளறிக்கொடுக்க முடியும். இதனால் நேரத்தில் மாற்றம் ஏற்படாது.
`அவனில்'
சமைத்த பின் அந்த வாடை நீண்ட நேரம் அதனுள் இருக்கும். இதைப் போக்க, ஒரு
பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து `அவன்' உள்ளே
வைத்து, 4 நிமிடங்களுக்கு `ஆன்' செய்து வைத்தால், வாசம் போய்விடும். சில
மாடல் களில் ஆட்டோமேட்டிக் கிளீனிங் வசதியும் உள்ளது.
மொத்தத்தில், `மைக்ரோவேவ் அவன்'
பயன்படுத்துவது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
அதுதான் `அவனுக்கும்', உங்களுக்கும் பாதுகாப்பு!’’
- சரியாகச் சொல்லி முடித்தார் சரவணன்.
Post a Comment