சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - டெங்கு காய்ச்சல் - சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-22 சி க்குன்குன்யா ஒருவகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்க...

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-22
சிக்குன்குன்யா ஒருவகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு, 'ஏடிஸ் ஏஜிப்டி’ (Ades aegypti) என்ற கொசுவால் பரவுகிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவும் இதுதான்.
 அறிகுறிகள்:
மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், உடல் வலி, தலைவலி, வாந்தி, உடலில் சிவந்த தடிப்புகள் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். காய்ச்சல் நின்ற பிறகும், சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
30 மி.லி. நிலவேம்புக் கஷாயத்தை காலை, மாலை அருந்தலாம்.
பப்பாளி இலைச்சாறு 20 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.
அமுக்ரா இலைப்பொடி, கிழங்குப்பொடி இரண்டையும் அரை ஸ்பூன் எடுத்து, அவற்றில் நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.
கோரைக்கிழங்கு, சுக்கு, சிறுவழுதலை வேர், கண்டங்கத்திரி, கண்டுபரங்கி சம அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
கால் ஸ்பூன் கிச்சிலி கிழங்குப்பொடியில் தேன் சேர்த்து அருந்தலாம்.
சிறுகுறிஞ்சான் இலைப்பொடி கால் ஸ்பூன் எடுத்து, நீரில் கலந்து உண்ணலாம்.
தூதுவளை, இம்பூறல், சங்கன்வேர், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
சிற்றாமுட்டி, சீந்தில், பற்படாகம் சம அளவு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.
கால் ஸ்பூன் ஈச்சர மூலி வேர்ப்பொடியைத் தேன் கலந்து உண்ணலாம்.
ஒரு டேபிள்ஸ்பூன் குதிரைவாலி சிறுதானியத்தை அரைத்து இளநீரில் கலந்து உண்ணலாம்.
வெள்வேல் இலைப்பொடி கால் ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
பொன்முசுட்டை வேர்ப்பொடி கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
முருங்கை வேர், மூங்கில் வேர், அருகம்புல் வேர் சம அளவு பொடித்து அவற்றை கால் ஸ்பூன் அளவு நீரில் கலந்து உண்ணலாம்.
நொச்சி இலை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, அதில் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
வேப்பம்பட்டையின் உள்பாகம் எட்டு கிராம், திப்பிலி நான்கு கிராம் எடுத்து நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
மருதம்பட்டைப்பொடி கால் ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
சதாவேரிக்கிழங்குப் பொடி கால் ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம்.  
30 மி.லி. ஆடாதொடை இலைச்சாறைத் தேன் கலந்து உண்ணலாம்.
வீக்கம் உள்ள இடங்களில், சிவப்புக்குக்கில் தைலத்தைத் தடவலாம்.
உணவு:
சேர்க்க வேண்டியவை:
காய்கறி சூப், கோதுமைக் கஞ்சி, இளநீர், பப்பாளி, ஆரஞ்சு, அன்னாசி, வால்நட், பாதாம், திராட்சை, கோஸ், அதிக அளவு நீர்ச் சத்துப் பொருட்கள்.
தவிர்க்க வேண்டியவை:
எண்ணெய், மசாலா சேர்ந்த உணவுகள், காபி, தேநீர், கோலா பானங்கள், சிகரெட், மதுபானம்.
தடுப்பு முறைகள்:
கொசுவலை, கொசு விரட்டி, ஜன்னல் வலை பயன்படுத்தவும்.
தண்ணீர்த்தொட்டி, தண்ணீர் இருக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை மூடிவைக்கவும்.
சிரட்டை, டயர்கள், நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தவும்.
பூந்தொட்டிகள் மற்றும் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.

Related

பாட்டி வைத்தியம் 5650479093891246229

Post a Comment

2 comments

பால கணேஷ் said...

Very Very useful matters! Thanks!

ஸ்கூல் பையன் said...

வணக்கம், தங்களது தளம் "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி:

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item