கேழ்வரகு புட்டு மாவு-அம்மா ரெசிபி! சமையல் குறிப்புகள்,

அம்மா ரெசிபி! ''என் மாமியார் சமைக்கும் பல சத்துணவுகளில் புட்டு மாவும் ஒன்று. சமைக்கும்போதே புட்டு ...

அம்மா ரெசிபி!
''என் மாமியார் சமைக்கும் பல சத்துணவுகளில் புட்டு மாவும் ஒன்று. சமைக்கும்போதே புட்டு மாவின் மணமும் சுவையும் கமகமக்கும். என் வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவதும் இதைத்தான்'' என்கிறார் தேனியைச் சேர்ந்த ஜோதி ராணி அருள் அழகன்.  வீட்டில் அனைவரும் தெம்புடன் இருக்க அடிக்கடி சமைக்கும் உணவு ரெசிபியும் இதுதானாம். ''இந்தப் புட்டு மாவை, சூடாகச் சாப்பிட்டால் தும்மல், மார்புச் சளி பிரச்னைகூட இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்'' என்கிற ஜோதி, புட்டு மாவு செய்முறையைப் புட்டுப் புட்டு வைத்தார்.  
 தேவையான பொருட்கள்: கேப்பை மாவு - ஒரு கப், பனங்கற்கண்டு - 50 கிராம், முற்றிய தேங்காய் - பாதி, மிளகுத் தூள் - ஒன்றரை ஸ்பூன், சித்தரத்தை - அரை ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கேப்பை மாவில் சிறிது உப்பு சேர்த்துப் புட்டுக்கு, பிசைவதுபோல் பிசையவும். வெறும் கடாயில் பிசைந்த மாவைப் போட்டு வறுக்கவும். மாவு லேசாக வறுபட்டதும், நல்லெண்ணெய் சேர்த்து வறுத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறவும். நல்ல வாசனை வந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத் தூள், சித்தரத்தை சேர்த்துக் கிளறி சூடாகச் சாப்பிடவும். மழைக்காலத்துக்கு ஏற்ற சிறந்த சிற்றுண்டி இது.
சித்த மருத்துவர் ஜீவா சேகர்: கேழ்வரகில் கால்ஷியம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.  இரும்புச் சத்தும் உள்ளதால் ரத்தசோகையைத் தடுக்கும். ஆஸ்துமா பிரச்னை தீரும். சித்தரத்தை, மிளகு சேர்ப்பதால், சளியைக் குணமாக்கும்.  உடல் உஷ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 8681563119966957104

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item