நாட்டுப்புறப் பாடல்கள்
தொழிலாளர் பாடல்கள் எங்கும் நெல் களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1 கிழக்கத...

தொழிலாளர் பாடல்கள்
எங்கும் நெல்களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1
கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2
மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3
வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 4
தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 5
நாட்டியக் குதிரைபோல - ஏலங்கிடி லேலோ
நாலுகாதில் ம’த’க்குதையா - ஏலங்கிடி லேலோ 6
குள்ளiமாடும் புள்ளiமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 7
பால்கொடுக்கிற பசுவுங்கூட - ஏலங்க’டி லேலோ
பையப்பைய மித’iக்குதையா - ஏலங்கிடி லேலோ 8
பல்லுப்போடாத காளைக்கன்றும் - ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ 9
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 10
எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ 11
கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ 12
நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க - ஏலங்கிடி லேலோ 13
வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் - ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா - ஏலங்கிடி லேலோ 14
ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு - ஏலங்கிடி லேலோ 15
அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் - ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ 16
வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ 17
அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ 18
புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் - ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ 19
வெள்ளiசெவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ 20
கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா - ஏலங்கிடி லேலோ 21
தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ 22
கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ 23
கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் - ஏலங்கிடி லேலோ 24
சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ 25
வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ 26
------------
சந்தனத் தேவன் பெருமை
எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1
சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2
எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3
சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 4
எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ 5
சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6
எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7
சந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 8
எல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ
சந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10
எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11
சந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12
எல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13
சந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14
எல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி - ஏலங்கிடி லேலோ 15
சந்தனம் வெட்டும் கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16
எல்லாருங் கட்டும்பொண்ணு-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - ஏலங்கிடி லேலோ 17
சந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18
எல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19
சந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20
எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21
சந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22
எல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23
சந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24
எல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25
சந்தனம் படுக்குங்கட்டில-ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26
எல்லாரு கழுத்திலேதான்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - ஏலங்கிடி லேலோ
சந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 28
எல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29
சந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30
எல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31
சந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32
எல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33
தனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34
எல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35
சந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36
எல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முகச்சவரம் - ஏலங்கிடி லேலோ 37
சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ 38
எல்லாரும் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 39
சந்தனம் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 40
------------
ஆள் தேடுதல்
தெருத்தெருவாய் தேடி வாறான் - ஏலங்கிடி லேலோ
திண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1
சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து - ஏலங்கிடி லேலோ
சயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ 2
முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பார்த்து -ஏலங்கிடி லேலோ முணுமுணுன்னு பேசிவாறான் -ஏலங்கிடி லேலோ 3
ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோ
ஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ 4
அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோ
அட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ 5
ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோ
ஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி லேலோ 6
சும்மாடும் சேர்த்தெடுத்து -ஏலங்கிடி லேலோ
சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -ஏலங்கிடி லேலோ 7
------------
விறகொடிக்கும் பெண்
வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1
காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2
காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3
காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4
கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5
கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6
கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7
விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8
மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9
கஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ
கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10
கஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ
கடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11
கம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ
காணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12
கஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ
கழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13
எங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ
என்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14
காட்டுக்குள்ளே விறகொடித்து -ஏதில்லலோ
சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15
கால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ
கஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16
--------------------
குடும்பப் பாட்டுகள்
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயைநம்பி ஏலேலோ பழம்இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன்இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீஇருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான்இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.
-----------------
பெண்ணுக்கு அறிவுரை
ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1
காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2
அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3
கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பார்க்கேதேடி ©சுண்டெலிப்பெண்ணே 4
கடைக்குப்போற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5
காவாலிப் பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6
நெற்றியிலே பொட்டுவைச்சு -சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7
புருவத்திலே மையைவச்சு -சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8
ஜோட்டிலே மாட்டல்வச்சு -சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9
வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணே
வெறும்பயலைப் பார்க்கேதேடி -சுண்டெலிப்பெண்ணே 10
புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்கதடி சுண்டெலிப்பெண்ணே 11
வாறவனையும் போறவனையும் -சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 12
சந்தைக்குப்போற சனங்களைநீ -சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப் பேச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 13
சலுக்காரு ரோட்டிலேநீ -சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 14
பக்கத்துவீட்டுப் பெண்களைச் -சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 15
இடுப்புச் சிறுத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 16
மண்டை பெருத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 17
விரிச்சநெற்றிக் காரியே -சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 18
இரும்புநெஞ்சு படைத்த -சுண்டெலிப்பெண்ணே
குறும்புபொண்ணும்நீ செய்யாதேடி -சுண்டெலிப்பெண்ணே 19
மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -சுண்டெலிப்பெண்ணே 20
உருட்டிஉருட்டி முழிக்கும் -சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 21
உதட்டழக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -சுண்டெலிப்பெண்ணே 22
கிளiமூக்குக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கிரித்துவரும் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 23
பல்வரிசைக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 24
குறுங்கழுத்துக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 25
-------
சிறுவர்களுக்கான பாடல்கள்
1. சாய்ந்தாடுதல்
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயக் கிளiயே சாய்ந்தாடு
அன்னக் கிளiயே சாய்ந்தாடு
ஆவாரம் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளiயே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.
2. கை வீசுதல்
கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
அப்பம் வாங்கலாம் கைவீசு
அமர்ந்து தின்னலாம் கைவீசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி யுண்ணலாம் கைவீசு
பழங்கள் வாங்கலாம் கைவீசு
பரிந்து புசிக்கலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு
தேரைப் பார்க்கலாம் கைவீசு
திரும்பி வரலாம் கைவீசு
கம்மல் வாங்கலாம் கைவீசு
காதில் மாட்டலாம் கைவீசு.
3. தோள் வீசுதல்
தோள்வீ சம்மா தோள்வீசு
சுந்தரக் கிளiயே தோள்வீசு
பச்சைக் கிளiயே தோள்வீசு
பவளக் கொடியே தோள்வீசு
திண்ணையின் கீழே தவழ்ந்து விளையாடும்
தேனே மணியே தோள்வீசு
4. காக்கா
காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டுவா
குருவி குருவி
கொண்டைக்குப் பூக்கொண்டுவா
கிளiயே கிளiயே
கிண்ணத்தில் பால் கொண்டுவா
கொக்கே கொக்கே
குழந்தைத் தேன் கொண்டுவா
அப்பா முன்னே வாருங்கள்
அழாதே யென்று சொல்லுங்கள்
நிலாப் பாட்டு.
1.
நிலாநிலா வாவா
நில்லாமே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா.
நடுவீட்டில் வையே
நல்ல துதி செய்யே
வெள்ளiக் கிண்ணத்தில் பால்சோறு
அள்ளiயெடுத்து அப்பன் வாயில்
கொஞ்சிக் கொஞ்சி யூட்டு
குழந்தைக்குச் சிரிப்புக் காட்டு
2.
எட்டிஎட்டிப் பார்க்கும்
வட்ட வட்ட நிலாவே
துள்ளiத்துள்ளiச் சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே.
3.
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
4.
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களiமண்ணுக்குப் போனேன்.
களiமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்பிள்ளை துள்ளiத் துள்ளi விளையாட.
---------
வித்திலா மலேவிளைந்த வெண்ணிலாவே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்வாய் வெண்ணிலாவே
அந்தரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே-அவர்
ஆடும்வகை யெப்படியோ வெண்ணிலாவே ?
ஞானமய மாய்விளக்கும் வெண்ணிலாவே -என்னை
நானறியச் சொல்லுகண்டாய வெண்ணிலாவே -
அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலாவே -எங்கள்
ஐயர்வரு வாரோசொல்வாய் வெண்ணிலாவே -
ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே -அருளாளர்
வரு வாரோசொல்லாய்,வெண்ணிலாவே.
Post a Comment