பாரம்பரிய_பிரண்டைத்_துவையல் - செய்வது எப்படி?
பாரம்பரிய_பிரண்டைத்_துவையல் - செய்வது எப்படி? 🌺 🌾 🌾 🌾 இப்போது நிலவும் சூழலில் கால் வலித்தால் மாத்திரை, உடம்பு வலித்தால் ...

பாரம்பரிய_பிரண்டைத்_துவையல் - செய்வது எப்படி?🌺 🌾 🌾 🌾
இப்போது நிலவும் சூழலில் கால் வலித்தால் மாத்திரை, உடம்பு வலித்தால் மாத்திரை என நாம் அனைவரும் மருந்துகடைகளில் வரிசையில் நிற்கிறோம். ரேசன் கடைகளில் தான் வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவோம். இப்போது மருந்துகடைகளில் வரிசையில் நின்று மருந்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கெல்லாம் காரணம் நம் முன்னோர்களின் வழியில் இருந்து பின்வாங்கியது தான். அப்போதெல்லாம், வாய்ப்புண் வந்தால் அகத்திகீரை, வயிறு சரியில்லை என்றால் மாதுளம்பிஞ்சு, உடல் பருமனானால் வெள்ளை பூசணி என உணவை மருந்தாக கடைபிடித்து வந்தார்கள். எப்போது நாம் உணவை ருசிக்காக சாப்பிடாமல், மருந்தென நினைத்து அதற்கேற்றபடி உண்ணுகிறோமோ அப்போது கண்டிப்பாக மருந்து கடைகளிலும், மருத்துவமனைகளிலும் கூட்டம் குறைய வாய்ப்புண்டு.
#பிரண்டையின்_பயன்கள்: 🌺
பிரண்டையை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நினைவுத்திறன் அதிகரிக்கும்.
எலும்பு முறிவை சரிபடுத்தவும், எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.
வயிறுப்பம், ஆஸ்துமா, வாயு பிடித்தல் இப்படி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
நம்ம ஊரில் பிரண்டையை துவையலாக உணவுகளில் சேர்த்திருப்பார்கள். பாரம்பரிய பிரண்டை துவையல் எப்படி செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: 🌾 🌾
பிரண்டை - ஒரு கட்டு
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
வரமிளகாய் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 10 பற்கள்
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
#செய்முறை: 🥀🍂 🥀🍂
1. முதலில் பிரண்டையை நன்கு கழுவி, அதின் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
2. பின் வாணலில் நல்லெண்ணையை ஊற்றி, காய்ந்ததும் பிரண்டையின் தண்டுப்பகுதிகளைப் போட்டு நன்கு நிறம் மாறி பச்சை வாசனை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
3. பிறகு அதே வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. இறுதியாக தேங்காயை துருவி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் வதக்கிய பிரண்டையுடன் , புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்.
#குறிப்பு: 🥀🍂 🥀🍂
1.பிரண்டை அரிக்கும் தன்மையுடையது மற்றும் அதை வதக்கும்போதும் நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை தோல் உரித்து சுத்தம் செய்யும்போது, கை காலில் சிறிதளவு நல்லெண்ணையை தடவி கொள்ளவும்.
2.பிரண்டை தற்போது அனைத்து பெரிய மற்றும் சிறிய கடைகளிலும் எளிதில் கிடைக்கிறது. அதனால் எளிதில் சிரமமின்றி வாங்க முடியும்.🌺
3.பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உண்ணலாம். குழந்தைகளுக்கு தோசையிலோ அல்லது சப்பாத்தியிலோ தடவி ப்ரவுன் சட்னி என்று சொல்லிக் கொடுத்தால் விரும்பி உண்பார்கள். மேலும் அது அவர்களது ஞாபகத்திறனை மேம்படுத்தும்.
4.பெரியவர்கள் சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணையை சேர்த்து இந்த பிரண்டை துவையலையும் சிறிது சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பிரண்டை துவையலை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் நோயில்லாமல் வாழலாம்."
🌰 வளமுடன் வாழ்க நலமுடன்🌺
Post a Comment