நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்?
‘‘நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும், அதன் விலை விவரங்களையும் சொல்லுங்கள்?’’ கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கல...

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கிவரும் காய்கறிப் பயிர்கள் துறையில் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் காய்கறி விதைகள் (உண்மை நிலை விதை) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள் இதனை வாங்கிப் பயன்பெறுகிறார்கள். குறிப்பாக வீரிய ஒட்டுரக வெண்டை கோ-5 மற்றும் செடி முருங்கை பி.கே.எம்-1 போன்றவை விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.
*வீரிய ஒட்டுரக வெண்டை கோ-4 மஞ்சள் நரம்புத் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. அடர்ந்த கரும்பச்சை நிறம் கொண்டது.
*புடலங்காயில் கோ-2 ரகமானது 30-35 செ.மீ நீளமுள்ள சிறிய காய்களைக் கொண்டது.
*செடி அவரை கோ (ஜி.பி)-14 ரகத்திற்குப் பந்தல் தேவையில்லை. இது ஒரு குத்து ரகமாகும்.
*சிறிய வெங்காயம் கோ(ஓ.என்)-5 ரகமானது விதை மூலம் நாற்று விடப்பட்டு நடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது.
*கிள்ளுக்கீரையானது 20 நாள்களில் முதல் அறுவடைக்கு வருகிறது. தரையிலிருந்து 5 செ.மீ விட்டு அறுக்க வேண்டும். பிறகு ஒரு வார இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். மொத்தமாக ஒரு ஹெக்டேருக்கு 90 நாள்களில் 30 டன் கீரை கிடைக்கிறது.
*பாகற்காய் கோ-1 ரகத்தில் காய்கள் அடர் பச்சை நிறமாக இருக்கும்.
*கொத்தவரை எம்.டி.யு-1 ரகமானது சாம்பல் நோயைத் தாங்கும் திறன் கொண்டது.
இத்துறையில் தானியங்கி ஊடகம் கலக்கும் கருவி மற்றும் விதைக்கும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவைப்படுவோர், விதைகளையும் குழித்தட்டையும் கொடுத்தால், 6 ரூபாய்க்கு (98 குழிகளுள்ள ஒரு குழித்தட்டிற்கு) ஊடகம் நிரப்பி விதைத்துத் தரப்படுகிறது.
விதைகளையும், குழித்தட்டையும், ஊடகத்தையும் கொடுத்தால், 1 ரூபாய் 50 காசுக்கு (98 குழிகளுள்ள ஒரு குழித்தட்டிற்கு) ஊடகம் நிரப்பி விதைத்துத் தருகிறோம். காய்கறி விதைகள் வாங்குவது, சாகுபடி செய்வது குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் எங்கள் துறையை அணுகவும்.’’
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3
தொலைபேசி: 0422 6611283
Post a Comment