நல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்! மதிப்புக்கூட்டினால் கூடுது லாபம்!மகசூல்!!
உ ற்பத்திச் செலவு குறைவு, மதிப்புக் கூட்டுதல் மூலம் கூடுதல் விலை என்று பாரம்பர்ய நெல் சாகுபடியின் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம். இதைப...
“எனக்கு இயற்கை விவசாயத்துல ஈடுபாடு வரக்காரணம், என்னோட கணவர் கணேஷ்தான். அவர் மஸ்கட்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். இப்போ விடுமுறையில வந்திருக்கார். நான் முதுகலை யோகா படிச்சிட்டு, மன்னார்குடியில் சில பள்ளிக்கூடங்கள்ல பகுதி நேர யோகா ஆசிரியையா வேலை செய்திட்டிருக்கேன். தினமும் இரண்டு மணிநேரம்தான் யோகா வகுப்பு இருக்கும். மற்ற நேரங்கள்ல வயலுக்கு வந்திடுவேன். என்னோட அப்பாவும் விவசாயத்துக்கு உதவியா இருக்கார். எங்க வீட்ல இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துல வயல் இருக்கு. இருந்தாலும் தினமும் டூ வீலர்ல வயலுக்கு வந்திடுவேன். மூணு வருஷத்துக்கு முன்ன, என்னோட கணவர் இந்த நிலத்தை வாங்கினார். இயற்கை விவசாயம் செய்யலாம்னு அவர் சொன்னப்போ, அதெல்லாம் சரியா வராதுனு நான் சொன்னேன். ஆனாலும், அவர் உறுதியோடு இருந்து என்னை உற்சாகப்படுத்தினார். ‘பசுமை விகடன்’ புத்தகத்துல வந்த கட்டுரைகளை என்னைப் படிக்கச் சொன்னார். அதையெல்லாம் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. அதுலதான் பாரம்பர்ய ரக நெல்லைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். குள்ளக்கார் ரகத்தை உற்பத்தி செய்து அதன் அரிசியைச் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, எனக்கு இருந்த இடுப்பு வலி குணமாக ஆரம்பிச்சது. என் அப்பாவுக்கு நீரிழிவு நோயும் கட்டுக்குள் வந்தது. அதுக்கப்புறம்தான் முழுமையா விவசாயத்துல ஈடுபட்டு பாரம்பர்ய நெல்லைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். பசுமை விகடனைப் பார்த்துத்தான் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கிறோம். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யானுதான் பயன்படுத்துறோம். அதையெல்லாம் தயாரிக்கத் தேவையான சாணம், சிறுநீரை விலைக்குத்தான் வாங்கிக்கிறோம். அடுத்து, இங்கேயே ஆடு, மாடுகளை வளர்க்கலாம்னு இருக்கோம்” என்ற கலைவாணி, வயலுக்குள் அழைத்துச் சென்று பயிர்களைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
போன வருஷம் சம்பாப்பட்டத்தில் ஒன்றரை ஏக்கர் வயல்ல காட்டுயானம் ரக நெல்லைச் சாகுபடி செஞ்சோம். கஜா புயல்ல பாதிப்பு ஏற்பட்டுடுச்சு. அதுல மொத்தம் 15 மூட்டை மகசூல் கிடைச்சது. இந்த வருஷம் குறுவைப்பட்டத்தில் 5 ஏக்கர் வயல்ல குள்ளக்கார் நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சிருக்கோம். விதைச்சு 45 நாள் ஆகுது. பயிர் நல்லா செழிப்பாக இருக்கு. ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம்” என்ற கலைவாணி நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
“நெல்லை அரிசியாக்கி நண்பர்கள், உறவினர்களுக்கு விற்பனை செய்திட்டு இருக்கோம். வாடிக்கையாளர்களோட தேவைக்கேற்ப 5 கிலோவிலிருந்து அதிகபட்சம் 50 கிலோ வரை பேக் செய்து விற்பனை செய்றோம்.
தொடர்புக்கு, கலைவாணி, செல்போன்: 82481 52571.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்
ஒரு ஏக்கர் பரப்பில் குள்ளக்கார் ரக நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்துக் கலைவாணி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…
குள்ளக்கார் ரகத்தின் வயது 110-115 நாள்கள். ஒரு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய, 5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் அடியுரமாக 50 கிலோ மாட்டு எரு போட்டு மண்ணைச் சமப்படுத்த வேண்டும். 30 கிலோ விதைநெல்லுடன் (முளைக்கட்டிய மூன்றாம் கொம்பு விதை) 150 மில்லி சூடோமோனஸ் திரவம் கலந்து, நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 10-ம் நாள் 30 மில்லி பஞ்சகவ்யாவை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் பாசனநீரில் 40 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் 30 மில்லி பஞ்சகவ்யாவை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் நாற்றுகள் செழிப்பாக வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து, ஏக்கருக்கு 25 கிலோ வீதம் தக்கைப்பூண்டு விதைக்க வேண்டும். 30-ம் நாள் தண்ணீர் கட்டி தக்கைப்பூண்டை மடக்கி உழ வேண்டும். அடுத்த 10 நாள்களில் தயிர் பதத்துக்கு மண்ணின் தன்மை மாறிவிடும். பிறகு ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு 2-3 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 3-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 300 மில்லி சூடோமோனஸ் திரவம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 13-ம் நாள், பாசன நீரில் 400 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். 23-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.
கலைவாணியின் கணவர் கணேஷ், “டெல்டா இயற்கை விவசாயிகள் அசோஷியேஷன்-ங்கற பேர்ல ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் சாகுபடி தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் இந்தக் குரூப் மூலமாகத் தெரிஞ்சிக்க முடியுது. இந்த வருஷம், குள்ளக்கார் நடவு செஞ்ச அன்னிக்கு, மழை பெய்ஞ்சு, நாற்றுகள் தண்ணீரில் மூழ்கிடுச்சு. அப்ப நான் மஸ்கட்ல இருந்தேன். பயிர்கள் அழுக ஆரம்பிச்சிடுச்சு. என்னோட மனைவி எனக்கு போன் பண்ணி வருத்தப்பட்டாங்க. இளம்பயிர்கள எப்படிக் காப்பாத்துறதுனு வாட்ஸ்அப் குரூப்ல உள்ள இயற்கை விவசாய நண்பர்கள்கிட்ட கேட்டேன்.
ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீர்ல 500 மில்லி முட்டைக் கரைசல் கலந்து தெளிக்கணும்னு சொன்னாங்க. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தைத் தண்ணீர்ல ஊற வெச்சு, அரைச்சு சாறு எடுத்துக்கணும். அதோட 10 முட்டைகளோட வெள்ளைக்கரு, 50 கிராம் வசம்பு, 50 கிராம் சூடோமோனஸ்னு மூன்றையும் கலந்து 10 லிட்டர் தண்ணீர் சேர்த்தால் முட்டைக்கரைசல் தயார். இதைத் தெளிச்ச சில நாள்கள்லயே, பயிர் உயிர் பிடிச்சு வளர ஆரம்பிச்சது” என்று அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புக்கு, செல்போன்: கணேஷ், மஸ்கட்: 0096896 350554
Thanks to vikatan.com
Post a Comment