அப்படியே குடிக்கவும், சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் மாதிரியான எளிமையான ரசம் செய்வது எப்படி?
அப்படியே குடிக்கவும், சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் மாதிரியான எளிமையான ரசம் செய்வது எப்படி? விதை நீக்கிய பேரீச்சம்பழம், புளி,...
விதை நீக்கிய பேரீச்சம்பழம், புளி, தக்காளி, தனியா, மிளகு, சீரகம், தேங்காய் ஆகியவற்றை தேவையான அளவுகளில் எடுத்துப் பச்சையாக அரைத்து (பேரீச்சை - 2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, தனியா, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்) பருப்புத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவிடவும் (3 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பைக் குழைய வேகவைத்துத் தண்ணீரில் கரைத்தது).
இறுதியாக ஒரு டீஸ்பூன் எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்க சுவையான சூப்பர் ரசம் ரெடி. இதைச் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். குடிக்கவும் செய்யலாம்.
திராட்சை, தக்காளி, அன்னாசி இவற்றில் ஒன்றை எடுத்துச் சாறு தயாரித்துக்கொள்ளவும் (திராட்சை எனில் - 100 கிராம் (விதை நீக்கவும்), தக்காளி என்றால் 50 கிராம், அன்னாசி என்றால் 6 ஸ்லைஸ்கள்)... இவற்றில் சிறிதளவு மிளகு (அ) பச்சை மிளகாய் 3, சீரகம் ஒரு டீஸ்பூன், பூண்டு 4 பற்கள், நறுக்கிய கொத்தமல்லித்தழை 4 டேபிள்ஸ்பூன் ஆகியவற்றை விழுதாக அரைத்துச் சேர்க்கவும். ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க சுவையான பச்சை ரசம் தயார். இதை அப்படியே குடிக்கலாம். சாதத்திலும் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். வைட்டமின் சத்துகள் அதிகமாகக் கிடைக்கும்.
Post a Comment