வீட்டுத் தேங்காயைக் கொண்டே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
எங்கள் வீட்டில் தேங்காய் நிறைய காய்க்கிறது. வீட்டுத் தேங்காயைக் கொண்டே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? நல்ல வெயிலுள்ள தினத்தில் ...
நல்ல வெயிலுள்ள தினத்தில் தேங்காயை உடைத்து, தண்ணீர் முழுவதும் வடித்துவிட்டு முதலில் ஒரு மணி நேரம் கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு, மூன்று தினம் முழுவதும் வெயிலில் வைக்க வேண்டும். நான்காம் தினம் கொட்டாங்குச்சியிலிருந்து தேங்காய் விலகிவிடும். இரவில் உலர்ந்த தேங்காயை காற்றுபட வைக்க வேண்டும். இவ்விதம் உலர்ந்த தேங்காயைத் திரும்பவும் நான்கு தினங்கள் உலரவைத்து இரண்டு கைகளாலும் அழுத்திப்பார்த்தால் நசுங்காமல் உடைந்தால் சரியாக உலர்ந்துவிட்டது என்று அர்த்தம்.
இந்த உலர்ந்த தேங்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். பத்து நல்ல உலர்ந்த தேங்காயிலிருந்து ஒரு கிலோவுக்கு மேலான தேங்காய் எண்ணெய் கிடைக்கும். மில்லில் (செக்கில்) எடுத்த எண்ணெயை ஐந்து, ஆறு தினங்கள் வெயிலில் வைத்து நல்ல துணியினால் (வெள்ளை) மூடி வைக்கவும். தெளிந்த எண்ணெயை ஜாடிகளில்விட்டுப் பத்திரமாக மூடி வைக்கவும். வீட்டிலே இயற்கையில் கிடைத்த தேங்காயில் இருந்து எடுத்த தேங்காய் எண்ணெயைச் சமையலுக்கும் தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.
Post a Comment