என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது? குழந்தை வயிறு வலித்து அழுதால்.......?
குழந்தை வயிறு வலித்து அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரைத்து. குழந்தையோட வயிற்றில் சதும்பப்பூசி விடணும். ஒரு வெற்றிலையை விளக்கில் காட்...

குழந்தை வயிறு வலித்து அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரைத்து. குழந்தையோட வயிற்றில் சதும்பப்பூசி விடணும். ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி சூடு படுத்தி இளஞ்சூட்டில் குழந்தையின் தொப்புளில் போட வேண்டும். 2 நிமிஷத்தில் வலி நீங்கி குழந்தை சிரிக்கும்
அடிக்கடி பேதியானால்: ஓமத்தைக் கருப்பாக வறுத்து, அதில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு பங்காக வற்றவைத்து, வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து கொடுக்க வேணடும். சிறு குழந்தைக்கு, ஒரு பாலாடை வீதம் 3 அல்லது 4 நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாளைக்கு 5 வேளை கொடுக்கலாம்.
சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியாப். போனால். ஜாதிக்காயைத் தாய்ப்பாலில் 2 உரை உரைச்சுபுகட்டிப் பாருங்க. உடனே குணம். கிடைக்கும். 3 வேளை இப்படிக் கொடுத்தா. முழுவதுமா குணமாயிடும். ஆனால் ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை 2 உரைக்கு மேல் உரைக்கக்கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுன்னா. குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.
Post a Comment