வாதம் விரட்டும் புளிச்சக்கீரை!
பு ளிச்சக்கீரை, புளிச்சைக்கீரை, புளிச்சுறு கீரை என்றெல்லாம் அழைக்கப்படும் இதைக் காசினி கீரை என்றும் சொல்வார்கள். தெலுங்கில் கோங்கிறாக்கு ...

https://pettagum.blogspot.com/2017/07/blog-post_13.html
புளிச்சக்கீரை, புளிச்சைக்கீரை, புளிச்சுறு கீரை
என்றெல்லாம் அழைக்கப்படும் இதைக் காசினி கீரை என்றும் சொல்வார்கள்.
தெலுங்கில் கோங்கிறாக்கு அல்லது கோங்கூரா என்பார்கள். ஆவக்காய் (மாங்காய்)
ஊறுகாய்க்கு அடுத்தபடியாகக் கோங்கூரா தொக்கு அல்லது கோங்கூரா பப்பு
ஆந்திராவின் கலாசாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக ஆந்திராவின்
குண்டூர் பகுதியில் விளையும் புளிச்சக்கீரை மிகச் சிறப்பானது.
புளிப்புச்சுவை கொண்ட இந்தக் கீரையை நறுக்கி, துவரம்பருப்பு சேர்த்து, வேகவைத்துக் கடைந்து தாளித்து `கோங்கூரா பப்பு’ என்கிற குழம்பாகவும் தொக்காகவும் செய்து சாப்பிடுவார்கள்.
இதயநோய் வராமல் பாதுகாப்பதுடன் சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடிய தன்மை இந்தக் கீரைக்கு உண்டு.
இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் ரத்தம் தூய்மையாகும்; மலச்சிக்கல் பிரச்னை விலகும்; உடல் குளிர்ச்சியாவதுடன் மந்தமும் நீங்கும்; ரத்த அழுத்தம் கட்டுப்படும்; ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.
வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்துச் சாப்பிட்டுவந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்களும் இதேபோல சாப்பிடுவதால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். சொறி, சிரங்கு உள்ளிட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டால், அதற்கான மேல்பூச்சு மருந்தைப் பூசி வரும்போது, புளிச்சக்கீரையைச் சாப்பிட்டுவந்தால் மிக விரைவில் பாதிப்பு விலகும்.
புளிச்சக்கீரையை உலரவைத்து, அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு, சிறிதளவு ஜாதிக்காய், சுக்கு, மிளகு, காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்துப் பொடித்து உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைபாடு நீங்கும். இந்தப் பொடியைக் காலை மற்றும் மதிய உணவில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்வதோடு, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாள்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் இதைச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும்.

Post a Comment