குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை! சைல்ட் சேஃப்டி கா சை விழுங்குவதில் இருந்து ...

குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

சைல்ட் சேஃப்டிகாசை விழுங்குவதில் இருந்து வெந்நீரை ஊற்றிக் கொள்வதுவரை, குழந்தைகளுக்கு நேரும் விபரீதங்களுக்கு பெற்றோரே பொறுப்பு. அதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம்குமார்.

‘‘குழந்தை வளர்ப்பில் எப்போதும் 100 சதவிகித கவனம் இருக்க வேண்டும். நிமிடங்கள், நொடிகள் கவனம் சிதறினாலும், அது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வலியுறுத்தல்கள், பாதுகாப்பான பேரன்ட்டிங்க்கு வழிகாட்டும்.

தவழ ஆரம்பிக்கும்போது...

தவழ, நடக்க ஆரம்பிக்கும்போது குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாயில் எடுத்து வைத்துக்கொள்வார்கள். அது சுகாதாரக்கேடான பொருளாகவோ அல்லது கூர்மையான பொருளாகவோ இருக்கும் பட்சத்தில், விளைவுகள் மோசமாகும். மேலும், நாணயம், சிறிய மூடிகள், பேட்டரிகள் என்று சின்னப் பொருட்களை அவர்கள் விழுங்கிவிட நேரலாம். எனவே, குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தரையில் எந்தப் பொருளும் சிதறியிருக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.

அவர்களுக்கு விளையாடக் கொடுக்கும் பொருட்களைத் தண்ணீரில் கழுவி அவ்வப் போது நன்கு சுத்தம் செய்து கொடுக்கவும். பொருட்களில் உள்ள அழுக்கு வாய்க்குள் சென்றால், வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். ஃபர் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்க வேண்டாம். அது சுவாசப் பாதையில் ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.

சூடான பால், தண்ணீர் போன்றவற்றை குழந்தைகள் முன்னிலையிலோ, குழந்தைக்கு எட்டும் உயரத்திலோ வைக்கக்கூடாது. மிக்ஸி, கிரைண்டர் என்று பொருட்களை ஸ்டாண்டில் வைக்கும்போது, அந்த ஸ்டாண்ட் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் பிடித்து இழுத்து மேலே சாய்த்துக் கொண்டால், ஆபத்துதான்.

கரன்ட்டில் கவனம்!

சில வீடுகளில் ஸ்விட்ச் போர்டை குறைந்த உயரத்தில் வைக்கிறார்கள். அதைத் தவிர்க்கவும். யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் அதில் தங்கள் விரல்களைவிட்டு விளையாடுவது, ஊக்கு, ஹேர்பின் போன்ற பொருட்களை விட்டு விளையாடுவது என்று விபரீதத்தை நெருங்குவார்கள். டேபிள் ஃபேன், அயர்ன் பாக்ஸ், எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் வைக்க வேண்டாம். எந்த எலெக்ட்ரிக் பொருளையும் பயன்படுத்தியபின் போர்டில் இருக்கும் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிடவும். மிக முக்கியமாக, சார்ஜ் செய்துகொண்டே மொபைலில் பேச, மொபைல் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம். சமீபத்தில், சார்ஜ் செய்துகொண்டே செல்லில் பேசிய சிறுவனுக்கு, அப்போது செல்போன் வெடித்ததால் பார்வையே பறிபோன விபத்து, அனைத்து வீடுகளுக்குமான எச்சரிக்கை.

ஆசிட், ஃபினாயில் பாட்டில்கள்...

கீப் அவே!


நிறைய வீடுகளில் ஜூஸ் பாட்டிலில் கெரசின், ஃபினாயில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் அவற்றின் நிறத்தில் ஈர்க்கப்பட்டு, ஜூஸ் என்று நினைத்து அவற்றை எடுத்துக் குடித்துவிடும் விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஏற்படும் குடல் பாதிப்பு.... உயிரிழப்பு வரை செல்லலாம். மேலும் அவற்றை எடுத்து விளையாடும்போது, அவர்களின் உடல், கண்களில் தெறித்து... பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இவ்வகையான பொருட்களையும், முக்கியமாக ஆசிட் பாட்டில்களையும்  குழந்தைகளின் பார்வைக்கே படாத இடத்தில், உயரத்தில் வைக்கவும்.

கதவை மூடவும்!

மாடி வீட்டில் வசிப்பவர்கள் மாடிப்படி, பால்கனியின் கதவுகளை எப்போதும் மூடியே வைக்கவும். அதேபோல வீட்டுக்குள்ளும் பாத்ரூம் கதவுகள் எப்போதும் மூடியே இருக்கட்டும். அங்கிருக்கும் அசுத்த தண்ணீரை அவர்கள் குடித்தாலோ, அதில் விளையாடினாலோ டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். மேலும், அந்த ஈரப்பதமான இடத்தில் வழுக்கிவிழ, தண்ணீர் நிரம்பியிருக்கும் பெரிய டப்பில் இடறிவிழ என... மொத்தத்தில் பாத்ரூம் குழந்தைகளுக்கு மிக ஆபத்தான ஓர் இடம்.

மருந்து, மாத்திரை... ஜாக்கிரதை!

பொதுவாக, குழந்தைகளுக்குப் பலவித வண்ணங்கள், வடிவங்களில் இருக்கும் மாத்திரைகளின் மீதும், இனிப்புச் சுவையுடைய டானிக்கின் மீதும் ஈர்ப்பு இருக்கும். யாரும் கவனிக்காத நேரம் அவற்றை எடுத்துச் சாப்பிட்டு விடு வார்கள் என்பதால், மருந்து, மாத்தி ரைகள் எப்போதும் அவர்களின் கண் களுக்கும், கைகளுக்கும் எட்டாமலேயே இருக்கட்டும்.

க்ரயான்ஸ்... உஷார்!

க்ரயான்ஸ், பல்பம், சாக்பீஸ் போன்ற பொருட் களை, பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதியுங்கள். இவை எல்லாம் குழந்தைகள் வாயில் வைக்க விரும்பும் பொருட்கள். ஆனால், அது வயிற்றில் இருந்து சிறுநீரகம் வரை தீங்கு ஏற்படுத்தும்... கவனம்.

ஊக்கு, பட்ஸ் பழக்கங்கள்... டேஞ்சர்!

பெற்றோர்களைப் பார்த்தே எல்லாச் செயல்களையும் செய்யும் குழந்தைகள், ஊக்கு, ஹேர்பின், பட்ஸ் என்று காதுக்குள் விடுவதையும் அவர்களைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டே இருப்பதாலோ அல்லது அவற்றை வைத்து விபரீதமாக விளையாடுவதாலோ காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் குறைபாடுவரை ஏற்படலாம்.

குழந்தைகளின் இயல்பு... குறும்பு. எனவே, அதைக் குறை சொல்வதையோ, பழிசொல்வதையோ நிறுத்தி, எல்லா வகையிலும் பாது காப்பான ஒரு சுற்றுப்புறத்தை அவர்களுக்கு எப்போதும் தருவது, பெற்றோரின் பொறுப்பே!’’

- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் பிரேம்குமார்.

Related

குழந்தைகள் நலம்! 7121602516794810486

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item