ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்-7

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! ...

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்!

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்!
 

தனது கல்லூரி மாணவியான வித்யாவுக்கும்
தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் இல்லத்தரசி கோமதிக்கும்
இங்கிலீஷ் பேச கற்றுத் தரும் உஷா மேம்,
TENSE பாடம் ஆரம்பித்திருக்கிறார்.

‘மே ஐ ஹெல்ப் யூ, மேம்?’’ என்று வித்யா கேட்டபோது, உஷா மேம் தோட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவருக்கு உதவியாக, கோமதி யும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.
‘‘வா, வித்யா! நீயும் எங்க ஜோதியில கலந்துக்கோ. அந்த செம்பருத்திச் செடிக்குத் தண்ணி ஊத்து’’ என்றார் மேம்.
நடுவே புகுந்த கோமதி, ‘‘ஆன்ட்டி! இந்த சூழல் நல்லா இருக்கு. இன்னிக்கு கிளாஸை இந்த கிரானைட் பெஞ்ச்சுலயே வச்சுக்கலாமா?’’ என்றாள்.
மேம் ‘சரி’ என்று சொல்லி முடிக்கும் முன்பே வித்யா, ‘‘ஐயோ! எலி... எலி... பெரிய எலி!’’ என்று கத்திக்கொண்டு, பெஞ்ச் மேல் ஏறி நின்றுவிட்டாள்.
எலி அங்கும் இங்குமாக ஓட, கோமதி அதைத் துரத்தினாள். கூடவே கமென்ட்ரி வேறு. ‘‘Rat! Rat! It’s running. It’s jumping. It’s climbing on the wall.’’
காம்பவுண்டில் இருந்த துவாரம் வழியாக எலியைத் துரத்திவிட்டுத் திரும்பிய கோமதி, உஷா மேமும் பெஞ்சு மீது நின்றிருப்பதைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.
‘‘ஆஹா! கண் கொள்ளாக் காட்சி! வாத்யார் தான் பசங்கள பெஞ்சு மேல நிக்க வெப்பாங்க. இங்கே ஆன்ட்டி... நீங்களும் வித்யாவோட சேர்ந்து நிக்கறீங்க... Both of you are standing on the bench!’’ என்று கை தட்டினாள்.
‘‘ஐ’ம் ஸாரி...’’ என்றார் உஷா மேம். ‘‘காலையில எலிக் காய்ச்சல் பத்தி பேப்பர்ல படிச்ச எஃபெக்ட்தான்’’ என்றவர், கோமதியைப் பாராட்ட ஆரம்பித்தார். ‘‘வெல்டன் கோமு! நான் Present continuous tense -ஐப் பத்தித்தான் இன்னிக்கி பாடம் நடத்தணும்னு இருந்தேன். நீ அதுலயே நேச்சுரலா பேசிட்டயே!’’
வித்யாவும் ‘‘ஆமா மேம்!’’ என்றாள் வியப்புடன்.
‘‘நடந்துக்கிட்டு இருக்கிற ஒரு செயலை சொல்லணும்னா, வெர்ப் உடன் ing சேர்த்து ( verb + ing ) சேர்த்து continuous tense -ல சொல்லணும். நீ running, jumping, climbing, standing -னு சரியான முறையில பேசிட்டே. குட்!’’ என்று மேம் சொன்னதும், கோமதி பெருமையாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
வித்யா கேட்டாள்... ‘‘டைம் ( time )-க்கும் டென்ஸ் ( tense )-க்கும் என்ன மேம் வித்தியாசம்?’’
‘‘பொதுவா டைம்ங்கிறது மூன்று பகுதிகளைக் கொண்டது; இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்னு. ஆனா, டென்ஸ்-ங்கிறது இங்கிலீஷ் வெர்ப்பை அடிப்படையா கொண்டது. இங்கிலீஷ்ல நிறைய tense- கள் இருக்கு ... present continuous, simple present, simple past, past continuous, present perfect, past perfect -னு பல இருக்கு.’’
‘‘எந்த மாதிரி சமயங்கள்ல இந்த tense களை உபயோகிக்கணும் ஆன்ட்டி?’’
  present continuous tense-- -ஐ பார்ப்போம். இதை progressive tense -னு கூட சொல்வாங்க. கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தற்காலிகமா நடக்கற செயல்களுக்கு இதை உபயோகிக்கலாம்... இப்ப எலி வந்து போனது மாதிரி. அப்புறம், முன்னூறு பக்க நாவலை நீ படிச்சிட்டிருக்கேனு வை... நூறு பக்கம்தான் படிச்சி முடிச்சிருப்பே. அப்ப I am reading a novel -னு சொல்லலாம். அதுக்காக, பேசற சமயத்துல படிச்சிட்டு இருக்கணும்னு அவசியமில்லை.’’
‘‘மொதல்ல
‘‘I am building a house, aunty’’ என்றாள் கோமதி.
‘‘குட்! அப்படி நீ சொல்லலாம். ஏன்னா வீடு கட்ட ஆரம்பிச்சுட்டே. ஆனா, இன்னும் முடிக்கல...’’
‘‘மேம்! நான் ரெண்டு sentence சொல்றேன். அப்படி பேசலாமானு சொல்லுங்க’’ என்றாள் வித்யா.
‘‘ஓகே... சொல்லு.’’
‘‘I am coming today. I am coming tomorrow’’.
‘‘ரெண்டு மாதிரியும் சொல்லலாம். ரெண்டுமே present continuous tense -தான். முதல்ல சொன்னது present time பத்தினது. ரெண்டாவதா சொன்னது future time பத்தினது. இதை arranged event -னு சொல்வாங்க. இதைப் பத்திப் புரிஞ்சிக்க உங்களுக்கு ஒரு சின்ன வொர்க் தர்றேன். அடுத்த வாரம் திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் என்ன செய்யறதா இருக்கீங்கனு ஒரு டைரில எழுதுங்க. நாலு வார்த்தைக்கு மேல இருக்கக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு, ரோஜாச் செடியை கவனிக்கப் போய்விட்டார் மேம்.
கோமதியும் வித்யாவும் டைரி எழுத ஆரம்பித்தனர். வித்யாவின் டைரி...
Monday 5 pm... visit to beauty parlour
Friday 7 pm... meet friend for dinner
கோமதியின் டைரி...
Monday 9 am... go to hospital
Friday 12 pm... consult Shivanikutty’s teacher
திரும்பி வந்த மேம், ‘‘என்ன... எழுதி முடிச்சிட்டீங்களா?’’ என்றபடி அவர்களுடைய டைரிகளை வாங்கிப் படித்தார்.
‘‘குட்! இப்போ ரெண்டு பேரும் டைரியை மாத்திக்கோங்க.’’
இருவரும் மாற்றிக் கொண்டனர்.
‘‘சரி. present progressive -ல எதிர்காலம் பத்திப் பேசலாம்னு சொன்னேன் இல்லியா... இந்த டைரியில இருக்கற விஷயங்களை வெச்சு, ரெண்டு பேரும் கேள்வி-பதில் பாணியில பேசுங்க, பார்க்கலாம்...’’
வித்யா: Can you meet me at 9 am on Monday?
கோமதி: Sorry, I’m going to hospital for check up.
வித்யா: What’s your plan for Friday?
கோமதி: I’m consulting Shivani’s teacher at 12 pm. Can we go for shopping on Friday evening?
வித்யா: Sorry, I’m meeting my friend Rani for dinner.
‘‘வெரிகுட்... வெரிகுட்...’’ என்று பாராட்டினார் மேம்.
வித்யா கேட்டாள். ‘‘மேம்! present continuous tense -க்கு ஏத்த மாதிரி வெர்ப்ஸ் இருக்கா?’’
‘‘நல்ல கேள்வி. ஏத்த மாதிரியும் இருக்கு. அதுக்கு உபயோகிக்கக்கூடாத வெர்ப்ஸும் இருக்கு’’ என்ற மேம் விளக்க ஆரம்பித்தார்.
‘‘உதாரணமா remember -னு ஒரு வெர்ப். I am remembering her -னு சொல்லக் கூடாது. I remember her -னுதான் சொல்லணும். அதேமாதிரி, verb+ing சேர்க்கற முறையை love, hate வெர்ப்களுக்கு பயன்படுத்தக்கூடாது.’’
மேம் சொல்லி முடித்ததும், ‘‘I am loving her - தவறு. I love her - சரி. அப்படித்தானே’’ என்று கோமதி கேட்க, ‘‘I hate her - சரி. I am hating her - தவறு, அப்படித்தானே’’ என்றாள் வித்யா.
‘‘நீங்க சொல்றது ரொம்பச் சரி’’ என்று மேம் தலை அசைக்க, ‘‘வெர்ப் லிஸ்ட் இருந்தா குடுத்துடுங்க ஆன்ட்டி. நாங்க எழுதிக்கிறோம்’’ என்றாள் கோமதி.
Present continuous tense கூடாதவை என்று மேம் சொன்னவை...
Like, want, need, prefer, believe, belong, understand, consist, smell, hear, know, forget, mind, resemble .
அதே மாதிரி present continuous tense -க்கு ஏற்ற மாதிரி வெர்ப்-கள்:
become, increase, grow, improve, begin, change, get, rise, fall.
‘‘உங்க ரெண்டு பேருக்கும் ஹோம் வொர்க்குக்கு அஞ்சு வாக்கியங்கள் தர்றேன். சரியா, தப்பானு சொல்லுங்க. தப்பா இருந்தா சரி பண்ணிட்டு வாங்க... இதோ எழுதிக்கோங்க...’’
 
கீழ்க்கண்ட வாக்கியங்கள் சரியா, தவறா?
1. I Prefer coffe to tea
2. I am wanting apples
3. The water level rises in the dam
4. I am hearing the sound
5. I am getting tired

- கத்துக்கலாம்

Related

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! 1999040138801681682

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item