அனைவரும் தெரியக்கூடிய முக்கியமான தகவல்! இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!,
அனைவரும் தெரியக்கூடிய முக்கியமான தகவல்! 1920 களின் பிற்பகுதியில் கல்கத்தா யுனிவர்சிட்டியின் சமஸ்கிரிதத்துறைத் தலைவராக இருந்தார் டாக்டர...

1920 களின் பிற்பகுதியில் கல்கத்தா யுனிவர்சிட்டியின் சமஸ்கிரிதத்துறைத் தலைவராக இருந்தார் டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி.
இவர் எழுதிய இந்திய சரித்திரம் என்ற நூல்தான் அன்றைய பாடநூல். ராஜஸ்தான் , ஒரிசா , பிஹார். மபி, உபி போன்ற மாநில பள்ளிகளிலும் தினம் படிக்கும் பாட நூலாகும்.
இதை படித்த B.N. பாண்டே அவர்கள் பதறிப்போனார். பாண்டேயும் ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்களும் சம காலத்து வரலாற்று ஆசிரியர்கள்.
இதற்க்கு ஆதாரம் கேட்டு ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்களுக்கு பல முறை கடிதம் எழுதினார். இறுதிவரை எந்த கடிதத்திற்கு பதில் வரவே இல்லை.
இறுதியில் பாண்டே அவர்களின் தொல்லை தாங்கமால் கடிதத்திற்கு பதில் எழுதினார் ஒற்றை வரி செய்தியுடன்.
அந்த செய்தி மைசூர் ஜெகட்டில் உள்ளது போய் பார்த்து கொள்ளுங்கள் என்று.
பதில் சொல்லிவிட்டோம் என்று மன நிம்மதியில் ஹரிபிரசாத் சாஸ்திரி இருந்து கொண்டுயிருந்த நேரத்தில் தனது பயணத்தை தொடர்ந்தார் பாண்டே அவர்கள்.
மைசூர் ஜெகட்டை அடைந்தார் அனைத்து விசயம் அலசப்பட்டது, 3000 பிராமணர்கள் தீயிட்டு மற்றும் திப்புவின் கொடுமை பற்றி எந்த வித ஆதாரம் இல்லை.
கூடுதலாக அவருக்கு பல பதில்கள் கிடைத்தது.திப்பு ஒரு மன்னனாக மட்டும் இல்லை நல்ல மனிதனாக இருந்து வந்துள்ளான் என்ற தகவல்.
மேலும் பிறமதத்தவர்களிடம் அவன் காட்டிய கனிவும் ஆதாரத்துடன் எடுத்தார். அவனது மந்திரிகள் / படைத்தலைவர்கள் அனைவரும் பிராமணர்கள் அவர்கள் திப்புவின் பக்கத்தில் என்றும் அன்புடன் இருந்துவந்த சம்பவம் தான் அதிகம்.
அனைத்து ஆதாரத்துடன் மாணவர்கள் பாட நூல் தேர்வு செய்யும் கல்கத்தா யுனிவர்சிட்டிக்கு சென்றார் துணை வேந்தர் அஸ்டோஸ் முகர்ஜியை சந்தித்து மட்டமான கற்பனை கொண்டு எழுதிய ஹரிபிரசாத் சாஸ்திரி நூலையும் தடை செய்வதோடு மட்டும் இல்லாமல் பாட நூலில் இருந்து நீக்கவும் போராடி இறுதியில் வெற்றியும் கண்டார்.
மாவீரன் திப்பு சுல்தானின் நினைவு நாள் இந்த சம்பவம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் பரப்ப வேண்டும்.
ஆதாரம் இஸ்லாமும் இந்தியக் கலாச்சரம் என்ற நூலில் பாண்டே அவர்கள் குறிப்பிடும் இந்த சம்பவம்
இதை அப்துஸ் சமது அவர்கள் தியாகத்தின் நிறம் பச்சை என்ற நூலிலும் சகோதர் பக்கீர் முகமது அல்தாபி ( த த ஜ தலைவர்) முஸ்லிம் தீவிரவாதிகள்?? என்ற நூலிலும் பதிந்து உள்ளார்கள்.
Post a Comment