இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 9 குடும்ப இன்ஷூரன்ஸ்!
இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 9 குடும்பம் சு வாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலிக்கிறது என டாக்டரிடம் சென்றார் பிரபாகரன். ஈ....

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 9
ஒருசில நாட்களிலேயே இயல்புநிலைக்குத் திரும்பினார். ஒரு வார ஓய்வுக்குப் பிறகு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இன்றி சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவர் மனைவிக்கு வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. ‘உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்’ என்று கூறிவிட்டனர்.
குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கத்தான் மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம். குடும்பத்தின் அளவு, நோய் பாதிப்புக்கான வாய்ப்பு, வருட வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு, பலரும் இரண்டு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பாலிசி எடுக்கின்றனர். மருத்துவச் செலவுகள் உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், இந்த பாலிசி போதுமானதாக இருப்பது இல்லை. ஒரே ஆண்டில், குடும்பத்தில் உள்ள இருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது, மொத்த க்ளெயம் தொகையையும் பயன்படுத்தியிருந்தால், உதவிபெற முடியாமல் போய்விடுகிறது. அதிகமான கவரேஜ்கொண்ட பாலிசி எடுக்கலாம் என்றால், ப்ரீமியம் மிக அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வந்ததுதான் ரெஸ்டோர் பாலிசி.
ஐந்து லட்ச ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கிறோம். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் செலுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதனுடன் கூடுதலாக 10 சதவிகிதம் செலுத்தினால் போதும், ரெஸ்டோர் பாலிசியாக எடுத்துவிடலாம். 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்க வேண்டும் என்றால், ப்ரீமியம் இரட்டிப்பாகிவிடும். ஆனால், வெறும் 10 சதவிகித அதிக ப்ரீமியத்தில் இன்னொரு ஐந்து லட்ச ரூபாய் பலனைப் பெற முடியும். 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தல், ஆம்புலன்ஸ், ரூம் வாடகை போன்ற நம்முடைய பிரதான மெடிக்ளெய்ம் பாலிசியின் அனைத்து விதிமுறைகளும் இதற்குப் பொருந்தும். க்ளெய்ம் பெறவில்லை எனில், போனஸ்கூட சில நிறுவனங்கள் அளிக்கின்றன.
ரெஸ்டோர் பாலிசியின் பலனைப் பெற, நாம் முதலில் எடுத்துள்ள பாலிசியில் முழுத் தொகையும் செலவாகியிருக்க வேண்டும். அதாவது, மூன்று லட்ச ரூபாய் பாலிசியில் முற்றிலுமாகச் செலவாகியிருந்தால் மட்டுமே ரெஸ்டோர் பாலிசியைப் பயன்படுத்த முடியும். இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகி, மீதி 50,000 ரூபாய் இருந்தால் ரெஸ்டோர் பாலிசியைப் பயன்படுத்த முடியாது. ஆனால், பாலிசி எடுத்த குடும்பத்தில் வேறு யாருக்காவது, எந்த பாதிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, அல்லது முதலில் க்ளெய்ம் பெற்ற நபருக்கு வேறு பாதிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, முதலில் மீதம் உள்ள 50,000 ரூபாய் கவரேஜ் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து ரெஸ்டோர் பாலிசியைப் பயன்படுத்தலாம்.
அதேபோல, பாலிசியில் கவரேஜ் பெற்ற நபருக்கு மீண்டும் அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால், ரெஸ்டோர் பாலிசியில் பயன்பெற முடியாது. அதாவது, பிரபாகரனுக்கு மீண்டும் இதய பாதிப்பு ஏற்பட்டால், ரெஸ்டோர் பாலிசி இருந்தும்கூட அவரால் அதைப் பயன்படுத்த முடியாது. காப்பீட்டு நிறுவனம் அதற்கு க்ளெய்ம் கொடுக்காது. ஆனால், வேறு பாதிப்பு, விபத்து என வரும்போது பயன்படும். எனவே, பாலிசி எடுக்கும்போது, இந்த வசதி உள்ளதா என்று பார்த்து வாங்கும்போது கூடுதல் பலனைப் பெற முடியும்.
Post a Comment