வாடகை கார்... பலே வருமானம்!
வாடகை கார்... பலே வருமானம்! அறிமுகம் வணக்கம். நான் சரண்யா. தஞ்சாவூர், சாஸ்திரா காலேஜ்ல இறுதியாண்ட...

https://pettagum.blogspot.com/2016/01/blog-post_14.html
வாடகை கார்... பலே வருமானம்!
அறிமுகம்
வணக்கம். நான் சரண்யா. தஞ்சாவூர், சாஸ்திரா காலேஜ்ல இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கிறேன். எங்க கிளாஸ்ல நான் மட்டும்தான் பொண்ணு. அந்தளவுக்கு இயல்பிலேயே கொஞ்சம் தில் பார்ட்டி. ‘தமிழ் ரென்டல் கார்ஸ்’-ன் உரிமையாளர், நானேதான்.
ஐடியா
அப்பா, அம்மா டிரைவிங் ஸ்கூல் வெச்சிருக்காங்க. அதனால எனக்கும் நேச்சுரலாவே பிசினஸ் மைண்ட். படிக்கிறது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், பேரன்ட்ஸுக்கு டிரைவிங் ஸ்கூல் பிசினஸ்... அதனால ‘ரென்டல் கார்ஸ்’ பிசினஸ் பண்ணலாம்னு ஸ்பார்க் ஆச்சு. அப்பா, அம்மாகிட்ட கேட்டேன். கேட்டேன்னா, ‘நான் பிசினஸ் பண்ணப் போறேன்... எனக்கு கார் வாங்கிக்கொடுங்க’னு போய் கேட்காம, அதுக்கு முன்னாடி நானே அந்த பிசினஸ் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டு, கத்துக்கிட்டு, திட்ட அறிக்கையோட அவங்ககிட்ட விண்ணப்பம் கொடுத்தேன். கார், கட்டண டாரிஃப், டிரைவர், விளம்பரம், கஸ்டமர்கள்னு அந்தத் தொழில் பற்றின ஏ டு இஸட் விஷயங்களையும் எதிர்கொள்ள நான் தயாரா இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டாங்க என் பேரன்ட்ஸ். நான் செகண்ட் இயர் படிக்கும்போது அவங்க பேர்லயே லோன் போட்டு எனக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்தாங்க. ‘தமிழ் ரென்டல் கார்ஸ்’ஸை ஆரம்பிச்சுட்டேன்!
ஏணி
பிசினஸ்ல ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் தளரலை. உழைப்பு...
இதை 100 பர்சன்ட் கொடுத்தேன். சீக்கிரமே தொழில் நுணுக்கங்களைக்
கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் வண்டிக்கு டியூ கட்டுற அளவுக்கு வருமானம்
எடுக்கிறதுதான் என் டார்கெட். அதை ரீச் பண்ணதுக்கு அப்புறம், தைரியமும்
தன்னம்பிக்கையும் கூட... அடுத்தடுத்த மாதங்களிலேயே லாபம் எடுக்க
ஆரம்பிச்சேன். கஸ்டமர்ஸ் பிடிக்கிறதுதான் இந்த பிசினஸ்ல முக்கியம். எங்க
டிரைவிங் ஸ்கூலுக்கு வர்றவங்க, உறவினர்கள், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்னு
திருச்சியில யாரையெல்லாம் எனக்குத் தெரியுமோ ஒருத்தர் விடாம என் பிசினஸ்
பற்றிச் சொல்லி வாய்ப்புக் கேட்டேன். சக்சஸ்!
ஆச்சர்யம்
ஒரு காருக்கு லோனைக் கட்டி முடிச்சதும், அடுத்த கார் வாங்கும் தைரியம் வந்துச்சு. இதுதான் தொழில், இதுல இந்தப் பிரச்னைகள் எல்லாம் வரலாம், அதை இப்படி எல்லாம் சால்வ் பண்ணணும்னு அடிப்படையைத் தெளிவா புரிஞ்சுக்கிட்டதால, தைரியமா இரண்டாவது காரும் வாங்கினேன். அதுக்கும் லோன் கட்டி, லாபம் பார்த்தேன். ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் டென்ஷன்னு ரொம்பக் கஷ்டம்தான். ஆனா, முடியாதது ஒண்ணும் இல்லை. சொன்னா நம்புவீங்களா... பிசினஸ் ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல இப்போ எங்கிட்ட 5 கார்கள் இருக்கு. முறையா டாக்ஸ் கட்டுறேன் பாஸ்!
சக்சஸ் ஃபார்முலா
வெற்றிக்கு வயசு தேவையில்லை. துணிஞ்சு இறங்கி, அதுக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்தா... நீங்களும் வின்னர்தான்!

Post a Comment