டயட் அடை : ஈஸி 2 குக் ! ஹெல்த்தி டைம்!!
ஹெல்த்தி டைம் ஈஸி 2 குக் சி ல நிமிடங்களில் உணவு தயாரிக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். அத...

பலருக்கும் காலை டிபன் என்றால், அது இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என மாவுச்சத்தான உணவுதான். சமச்சீர் சத்துக்கு எங்கு செல்வது? காலை உணவில் சமச்சீர் சத்துக்கள் இருந்தால், அன்றைய நாளின் தொடக்கம் உற்சாகமாக இருக்கும். இதோ அதற்கான ரெசிப்பி!
டயட் அடை
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 150 கிராம், துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 10 (காரத்துக்கு ஏற்ப), உப்பு - தேவைக்கு ஏற்ப, பொடியாக நறுக்கிய சௌசௌ, வெங்காயம் - தலா 1 கப், தேங்காய் - அரை கப்.
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: அரிசி, பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊறவைத்து, கொரகொரப்பான பக்குவத்தில் அரைக்க வேண்டும். அதில் தாளித்த பொருட்கள், நறுக்கிய காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து, சின்னச்சின்ன அடைகளாகச் சுட வேண்டும். சௌசௌக்குப் பதிலாக சுரைக்காய், முருங்கைக் கீரை, வாழைப்பூ போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம். புதிய சுவை கிடைக்கும். அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், தாதுஉப்புக்கள், நல்ல கொழுப்பு உள்ளிட்டவை சமச்சீராகக் கிடைக்கின்றன.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி. குழந்தைகளுக்கு அவசியம் பரிந்துரைக்கப்படும் உணவு இது. மதிய உணவு வேளை வரை பசிக்காது.
பெண்கள், கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எலும்புகள் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Post a Comment