ஷாப்பிங் போகலாமா..? பிளெண்டர் உள்ள கிச்சன்... பக்கா ஈஸி! மா டர்ன் கிச்சன்களில் பிரபலமாகி வரும் பிள...
ஷாப்பிங் போகலாமா..?
பிளெண்டர் உள்ள கிச்சன்... பக்கா ஈஸி!
மாடர்ன்
கிச்சன்களில் பிரபலமாகி வரும் பிளெண்டர் (Blender) பற்றியும், அதன் வகைகள்,
பயன்படுத்தும் மற்றும் பராமரிக்கும் முறைகள் பற்றியும் விரிவாகச்
சொல்கிறார், சென்னை, ‘சத்யா ஏஜென்ஸி’யின் ஃப்ளோர் மேனேஜர் அஜய்குமார்.
‘‘இப்போது பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அலுவலகம் செல்பவர்களாக
இருப்பதால், அவர்களின் கிச்சன் வேலைகளைச் சுலபமாக்க மார்க்கெட்டில் பல
உபகரணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், பிளெண்டர்.
காய்கறிகள் நறுக்குவது, பருப்பு, கீரை கடைவது, முட்டை அடிப்பது, மாவு
பிசைவது போன்ற வேலைகளைச் சுலபமாக்குகிறது இந்த பிளெண்டர்.
மூன்று வேலைகள்... மெஷின் ஒன்று!
பிளெண்டர், சாப்பர், விஸ்க்... இவை மூன்று சேர்ந்த எலெக்ட்ரானிக்
மெஷின்தான் பிளெண்டர். இதில் பிளெண்டரை பருப்பு, கீரை கடையப்
பயன்படுத்தலாம். காய்கறிகளை விரும்பிய வடிவத்தில் வேகமாக நறுக்க சாப்பர்
பயன்படும். முட்டை அடிக்கும் பயன்பாட்டுக்கு விஸ்க் உதவும்.
இந்த மெஷின்களில் ஆட்டா நீடர் காம்பர் (atta kneader comper) என்பது,
சப்பாத்தி மாவை பிசையப் பயன்படும். ஆனால், இது எல்லா நிறுவனங்களின்
பிளெண்டர்களிலும் இருக்காது. எனவே, ஆட்டா நீடர் காம்பர் வேண்டுபவர்கள், அது
அட்டாச் ஆகி இருக்கிற பிளெண்டராகப் பார்த்து தேர்வு செய்யவும்.
ஃபைபர், ஸ்டீல்... இரண்டு வகை!
பிளெண்டர், ஃபைபர் மற்றும் ஸ்டீல் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
ஃபைபரின் மோட்டார் 300 வாட்ஸ் செயல்திறன் கொண்டது. ஸ்டீலின் மோட்டார் 400
வாட்ஸ் செயல்திறன் கொண்டது. ஸ்டீலைக் காட்டிலும் ஃபைபர் பிளெண்டர் விலை
குறைவு என்றாலும், எலெக்ட்ரானிக் மெஷின் என்பதால் பாதுகாப்புக்
காரணங்களுக்காக ஸ்டீல் பிளெண்டரைத் தேர்வு செய்வதே நல்லது.
என்ன விலை?
பிரபல நிறுவன பிளெண்டர்கள், 1,800 முதல் 5,500 ரூபாய் வரையில் கிடைக்கின்றன. லோக்கல் பிராண்ட் 600 ரூபாய் முதல் கிடைக்கிறது.
வாங்கும்போது..!

காய்கறி
நறுக்க, முட்டை அடிக்க, சாப்பாத்தி மாவு பிசைய என்று எந்தத் தேவைக்காக
வாங்குகிறோமோ, அதன் அடிப்படையில் பிளெண்டரைத் தேர்வு செய்யவும்.

பிளெண்டரில் இருக்கும் பிளேடின் தரத்தை கவனிக்கவும்.

எலெக்ட்ரானிக் பொருள் என்பதால், தரமான பிராண்டில் வாங்குவது நல்லது.

வாங்கும் கடையிலேயே ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து செக் செய்த பிறகே பில் செய்யவும்.

பிளெண்டருக்கு
பொதுவாக 2 வருட வாரன்டி கிடைக்கிறது. சில பிராண்ட்கள் லைஃப்லாங் ஃப்ரீ
சர்வீஸும் வழங்குகிறார்கள்... ஆராய்ந்து வாங்கவும்.
பராமரிக்க..!

இதில் மோட்டார்தான் பாதுக்காக்க வேண்டிய பாகம் என்பதால், அதில் தண்ணீர் போய்விடாமல் பார்த்துக்கொள்ளவும்.

பயன்படுத்திய
பின் மெஷினில் வெந்நீர் சேர்த்து ஓடவிட்டு ஒருமுறை சுத்தம் செய்து,
துடைத்து வைக்கவும். இல்லையெனில,் பிளேடின் தரம் குறைய ஆரம்பிக்கும்.

குறைந்த
விலையில், ஃபைபர் மெட்டீரியலில் என வாங்கினால், மோட்டர் இயங்கும்போது
சமயங்களில் உருகவும், உடையவும் வாய்ப்புகள் உண்டு... கவனம்.
Post a Comment