விரல்கள் செய்யும் விந்தை ஆகாய முத்திரை ப ஞ்சபூதங்களில் ஆகாயம்தான் பிற சக்திகளான நிலம், நீர், நெர...
விரல்கள் செய்யும் விந்தை
ஆகாய முத்திரை
பஞ்சபூதங்களில்
ஆகாயம்தான் பிற சக்திகளான நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்றுக்கு இடம்
அளிப்பது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்துள்ளது ஆகாயம். நமது உடலிலும்
காதின் உட்பகுதி, இதயம் போன்ற பல்வேறு இடங்களில் ஆகாயத்துக்கு ஒப்பான
வெற்றிடங்கள் உள்ளன. எனவே, காது, மூட்டு, இதயம் சார்ந்த தொந்தரவுகளைச்
சரிசெய்ய ஆகாய முத்திரையைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரை, ஆகாய சக்தியைச்
சமன் செய்து, ஆகாய சக்தியின் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் நோய்களைச்
சரிசெய்கிறது.
கட்டளைகள்

தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம்.

ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது.

ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.
எப்படிச் செய்வது?
கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்

பயணங்களால்
ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல்
போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல்
10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.

பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

மன அழுத்தம் குறைய இரு வேளையும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

காது
அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல்
பிரச்னைகளுக்கு முதலுதவிபோல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த
மருத்துவரை அணுகலாம்.

வெர்ட்டிகோ,
தள்ளாட்டம், நிலை தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஒருமாதம் வரை தொடர்ந்து
செய்ய வேண்டும். காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால்
தாடையில் ஏற்படும் பிடிப்பு (Lock jaw) ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும்.

குழந்தைகள்,
வயோதிகர், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் இதயப் படபடப்பு,
முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம்
ஆகியவை மட்டுப்படும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறைய 2-5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

தினமும் இரு வேளை ஐந்து நிமிடங்கள் செய்ய, எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னை தடுக்கப்படுகிறது.

அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்.
Post a Comment