நாட்டு மருந்துக் கடை - 21
நாட்டு மருந்துக் கடை - 21 நா ட்டு மருந்துக்கடையை அன்றைக்கு அதிக மக்கள் நாடியது மூட்டுவலிக்கான வீட்டு வைத்தியத்த...

‘அத்தி சுரமுதல் அனந்தசுரம் பித்தமும் போம்’ என்ற அகத்தியரின் பாடல், சிற்றாமுட்டி பலவகை ஜுரங்களைப் போக்கும் என்கிறது. உடலில் உள்ள வெப்பத்தை அகற்றி, எலும்பு ஜுரத்தைக் குறைக்கும்.சிற்றாமுட்டியின் வேர்க் கஷாயம் இன்றும் கிராமப்புறத்தில் ஜுரத்துக்கான முக்கியமான கைவைத்தியம். ஜுரத்துடன் உடல்வலியையும் போக்கும் இதன் மருத்துவத்தன்மையே இதற்குக் காரணம்.
சிறுநீர்ப்பெருக்கும் தன்மை (Diuretic) கொண்ட சிற்றாமுட்டி, சிறுநீர்ப்பாதை தொற்றுகளை விரைவாக வெளியேற்றும். வறட்சி அகற்றும் தன்மையும் (Emollient) இருப்பதால், எண்ணெய் சத்து இழந்து அல்லது கொஞ்சம் வறண்டு ஏற்படும் ‘ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்’ என்னும் வயோதிக மூட்டுத் தேய்மானத்துக்கு இந்தத் தைலம் சரியான தேர்வு. வலியுடன் வீக்கமும் கொண்டிருக்கும், ருமட்டாய்டு அல்லது அடிபட்டு வரும் மூட்டுவலிக்கும் இதன் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செயல்திறனால் பயன் கிடைக்கும்.
வாசிஸின் (Vasicine) மற்றும் வாசிசீனன் (Vasicinone) சத்து சிற்றாமுட்டியில் இருப்பது இந்த மூலிகைக்குக் கூடுதல் சிறப்பு. கபத்தை அறுத்து, வாதம் குறைக்கும் மூலிகைதான் ஆஸ்துமாவுக்கான சரியான தேர்வாக இருக்கும். மூச்சுக்குழாய் தளர்த்தியாகவும் (Bronchodilator), வலி நீக்கியாகவும் மலமிலக்கியாவும் செயல்பட்டு, ஆஸ்துமா நோயில் இருந்து, சிற்றாமுட்டி சிறந்த நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள சில ரசாயனங்கள் கல்லீரலைப் பலப்படுத்தவும், கிருமிகளை அழிப்பதற்கும் பயன்படுகின்றன. மனப் பதற்றத்தை (Anxiety) குறைத்து, மனச்சுமை கூடாது இருக்கவும் சிற்றாமுட்டி உதவுகின்றதாம்.
வெறும் வாதநோய் மட்டும் அல்லாது, பல பித்த நோய்கள், குன்மம், பசியின்மை ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் சரபங்க வில்வாதி லேகியத்திலும், ரத்தக் குறைவு, உடல் பலவீனம், இளநரை போன்ற நோய் நிலைகளுக்கு வழங்கப்படும் கரிசாலை லேகியத்திலும், சிற்றாமுட்டி வேர் மிக முக்கிய மருந்துப்பொருள். தூக்கத்தில் விந்துகழிதல், விரைவில் விந்து வெளியேறுதல் போன்ற நிலைகளுக்கு, சிற்றாமுட்டி வேர் சூரணம், அமுக்கரா கிழங்குப் பொடி, நீர்முள்ளி விதைப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முருங்கைப் பிசின் சேர்த்த கலவையை இரண்டு கிராம் பால் அல்லது நெய்யில் தினமும் இரு வேளை சாப்பிட, விரைவில் மாற்றம் உறுதி.
சிற்றாமுட்டியின் வேர்ப் பொடி 500 கிராம் எடுத்து, மூன்று லிட்டர் தண்ணீர் சேர்த்து, 750 மி.லி அளவுக்குக் குறுக்கி, அதில், மிளகு, ஏலம், வெட்டிவேர், சுக்கு, மிளகு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் சேர்த்து, 1 லிட்டர் நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி எடுத்துக்கொண்டு, வாரம் இரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, உடலில் வாதம் அதிகரிப்பதால் உண்டாகும் மூட்டு வலி, உடல் வலி போன்றவை சொல்லாமல் தெறித்து ஓடும்.
வயதானவர்களின் மூட்டு வலி, வீக்கம், உடல் வலி போன்ற வாத நோய்களை நீக்கி, அவர்களின் அன்பு ஊன்றுகோலாகப் பயன்படும் சிற்றாமுட்டிக்கு, அந்த அன்பின் அடையாளமாக இதய வடிவ இலைகளைக் கொடுத்திருக்கிறது இயற்கை!
பாரம்பர்ய மருத்துவங்களில் சிற்றாமூட்டி!
பல்வேறு நாடுகளின் பாரம்பர்ய மருத்துவத்தில் சிற்றாமுட்டியின் பயன்பாடு இன்றும் அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க நாட்டுப் பழங்குடியினர், நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு இதனை அருமருந்தாகப் பாவிக்கின்றனர். மூல நோயினைப் போக்க, இதன் இலைகளை, கீரை போல சமைத்துச் சாப்பிடும் பழக்கம் இன்றும் இருக்கிறது.
Post a Comment