இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 6
இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 6 இ ன்றைய வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறுபடுவதால், நோய்களும் அதன் சிக்க...

மேல் நடுத்தர, நடுத்தர, ஏழை மக்களால் இவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது. இந்தப் பிரச்னையைக் கையாள சிறந்த வழி மருத்துவக் காப்பீடு பாலிசி எடுப்பதுதான்.
இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பல்வேறு மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை வழங்குகின்றன. எனினும், இந்த பாலிசிகளின் தன்மை மற்றும் அதனைப் புரிந்துகொள்வது மிகவும் சிக்கலாக உள்ளன. எனவே, நீங்கள் சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வுசெய்ய என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். மெடிக்ளெய்ம் பாலிசி வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 வழிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் சுமார் 28 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான நிறுவனங்கள் உயிர் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. பாலிசி எடுக்க விரும்பும் நிறுவனத்தின் பின்னணி, மேலாண்மை, மருத்துவமனைகளுடனான நெட்வொர்க் முதலானவற்றைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இதனுடன், வேறொரு நிறுவனத்தின் பாலிசியை ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால், நல்லதை நம்மால் தேர்வுசெய்ய முடியும்.
குறிப்பு: ஒரு நிறுவனத்தின் தரம் அறிந்து, அந்த நிறுவனத்தின் காப்பீட்டை வாங்குவது மிகவும் சிறந்தது.
க்ளெய்ம் செட்டில்மென்ட் விபரம்
ஒரு நிறுவனத்தைத் தேர்வுசெய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் க்ளெய்ம் செட்டில்மென்ட் விவரம் மற்றும், க்ளெய்ம் செய்யும் விதம் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள், வெளி நிறுவனங்களுடன் இணைந்து, க்ளெய்ம் வழங்கி வருகின்றன. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் இந்த க்ளெய்ம் செட்டில் செய்யும் முறையை தாங்களே செய்துவருகின்றன. பொதுவாக, பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டுத் தொகை, மருத்துவக் காப்பீடு மட்டும் வழங்கும் நிறுவனத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.
குறிப்பு: பொதுக் காப்பீட்டு நிறுவனத்தைவிட, மருத்துவக் காப்பீடு மட்டுமே வழங்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்வது சிறந்தது.
உள்ளடக்கம் மற்றும் விதிவிலக்குகள்
பாலிசி எடுக்கும் முன், இருக்கும் நோய்களுக்கு ஆரம்ப சில ஆண்டுகளுக்கு கவரேஜ் கிடைக்காது என்பதை நினைவில்கொள்வது மிக முக்கியம். உதாரணமாக, காப்பீடு எடுப்பதற்கு முன்பே சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கவரேஜ் கிடைக்காது. மேலும், ஒரு சில மருத்துவ நடைமுறைகளான கண் சிகிச்சை, பல் அறுவைசிகிச்சை, குடல் இறக்கம் போன்ற நோய்கள் முதல் சில ஆண்டுகள் கவரேஜிலிருந்து விலக்கப்பட்டு இருக்கும். இவை அனைத்தையும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பு: உங்கள் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்பு, விலக்கப்பட்ட நோய்கள் பட்டியலை ஒரு முறை கூர்ந்து பாருங்கள்.
கட்டண வரம்பு
சில நோய்களின் தன்மையைப் பொறுத்து, பாதுகாப்புச் செலவினங்களைச் சமாளிக்க, காப்பீட்டு நிறுவனங்கள் துணைக்கட்டண உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் அடிப்படையிலேயே அறை வாடகை, டாக்டர்கள் கட்டணம் போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றன. நோயாளி தங்கியிருக்கும் அறை வாடகை என்பது, காப்பீட்டுத் தொகையில் ஒரு சதவிகிதம் அல்லது ரூ 2,000 இவற்றில் எது அதிகமோ அதுவே வழங்கப்படும். இரண்டு லட்சத்துக்குக் காப்பீடு எடுத்திருந்தால், 2,000 ரூபாய் அறை வாடகைக்குச் செலவிடப்படும். இதுவே, ஒரு லட்ச ரூபாய்க்குக் காப்பீடு எடுத்திருந்தால், காப்பீட்டு நிறுவனம் 1,000 ரூபாய் வரை மட்டுமே செலவிடும்.
குறிப்பு: எந்த நிறுவனம் கட்டண வரம்பு இல்லாமல் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது எனத் தெரிந்துகொண்டு காப்பீடு எடுப்பது நல்லது.
Post a Comment