65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?
65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா? {?}என் வயது 65. என் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கிறது. மெடிக்ளெய்ம...
https://pettagum.blogspot.com/2015/07/65.html
65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?
{?}என் வயது 65. என் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கிறது. மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?
‘‘நீங்கள் மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க லாம். எல்லா பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த பாலிசியை விநியோகம் செய்கின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்து, பாலிசியின் நிபந்தனைகள் மாறுபடலாம். நீங்கள் செலுத்துகிற பிரீமியத்துக்குத் தகுந்த மாதிரி சிறந்த பாலிசியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.”
{?}எனக்கு சென்னையை அடுத்த
தாம்பரத்தில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டை விற்று கிண்டியில் ஒரு வீடு
வாங்கலாம் என்று இருக்கிறேன். நான் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டுமா?
‘‘நீங்கள் தாம்பரத்திலிருக்கும் வீட்டை விற்று, கிண்டியில் வீடு வாங்கும்போது மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், சில விதிமுறைகளை அனுசரிக்க வேண்டும். தாம்பரத்தில் இருக்கும் வீட்டை வாங்கிய மூன்று வருடங்களுக்குள் அதை விற்க நேரிட்டால், அதற்கு குறுகிய மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, ஜூலை 30, 2012-ல் வீட்டை வாங்கி, ஜூலை 14, 2015-க்குள் விற்று இருந்தால், குறுகிய கால மூலதன ஆதாயம், வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்கு வரி செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல், தாம்பரத்தில் வாங்கப்பட்ட வீடு மூன்று வருடங்களுக்குமேல் ஆகியிருந்தால், அதை விற்று வரும் தொகையைக் கொண்டு நீங்கள் கிண்டியில் வீடு வாங்கும்போது, உங்கள் பெயரில் இன்னொரு வீடு சொந்தமாக இருந்தாலும் வரிச் சலுகை கிடைக்கும். ஒருவேளை நீங்கள் புதிதாக வாங்கப்போகும் வீட்டையும் சேர்த்து இரண்டு வீட்டுக்குமேல் உங்களுக்குச் சொந்த வீடு இருந்தால், நீங்கள் வீட்டை விற்ற மொத்த தொகைக்கும் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.’’
{?}சமீபத்தில் ஜீவி(GV) ஃப்லிம்ஸ்
நிறுவனம் மூலதனத்தைக் குறைத்திருக்கிறது. இதனால் பங்கு வர்த்தகத்தில்
ஈடுபடு பவர்களுக்கு எதாவது லாபம் / நஷ்டம் இருக்கிறதா?
‘‘ஜீவி ஃப்லிம்ஸின் பங்குகள் மிக அரிதாகத்தான் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகிறது. மேலும், இந்த நிறுவனப் பங்கின் முக மதிப்பு குறைந்திருப்பதால், இந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க வழியில்லை. சில ஆண்டு் களாக இந்த நிறுவனம் நஷ்டம் கண்டு வருவதால், ஏதாவது புதிதாக நடந்தால்தான் லாபம் கிடைக்கலாம்.”
{?}நான் கத்தாரில் வேலை செய்யும் எனக்கு இப்போது வயது 28. எனக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பென்ஷன் திட்டங்களைக் குறிப்பிடவும்.
‘‘உங்களுக்கு 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே ஓய்வுக்கால முதலீடுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி இருப்பது சரியான விஷயமே. நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்றும், அப்போது சராசரியாக ஆண்டு பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கும் என வைத்துக் கொள்வோம். இதைக் கருத்தில் கொண்டே உங்களின் 80 வயது வரைக்குமான தேவைகளை பூர்த்தி செய்கிற மாதிரி முதலீட்டைத் தீர்மானிக்க வேண்டும்
ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே உங்களின் ஓய்வுக்காலத்தை வளமாக மாற்ற போதுமானதாக இருக்கும். உங்களின் இன்றைய மாத செலவு ரூ.30,000 என தோராயமாக எடுத்துக் கொண்டால், 7% பணவீக்க விகிதத்தில் உங்களுக்கு 60 வயதில் ரூ.2.61 லட்சம் மாத செலவு இருக்கும். 80 வயது வரை வாழ்வீர்கள் என்கிற கணிப்பில் ரூ.5.72 கோடி தொகுப்பு நிதி வேண்டும். ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.6,120 வீதம் 32 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் போதும்.”
{?}நான் எஸ்ஐபி முறையில்
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். 15-லிருந்து 18
வருடங்கள் கழித்து, எனக்கு ரூ.1.5 கோடி திரும்பக் கிடைக்க வேண்டுமானால்,
நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
‘‘இன்றிலிருந்து 18 வருடத்துக்குள் ரூ.1.5 கோடி வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீண்ட கால முதலீட்டில், நல்ல ஈக்விட்டி ஃபண்டுகள் 18 சதவிகிதம் வரை வருடாந்திர வருமானம் தரக்கூடியவை. மாதம் ரூ10,000 வீதம் எஸ்ஐபி முறையில் 18 வருடங் களுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், உங்களின் இலக்கை அடைந்துவிடலாம். நீங்கள் பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் - ரூ.3,500. எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.3,500, சுந்தரம் செலக்ட் மிட் கேப் - ரூ.3,000.’’
{?}என் வயது 65. என் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கிறது. மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?
சேகர், நாகர்கோவில்.
பாகுபலி, ஆலோசகர், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ். ‘‘நீங்கள் மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க லாம். எல்லா பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த பாலிசியை விநியோகம் செய்கின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்து, பாலிசியின் நிபந்தனைகள் மாறுபடலாம். நீங்கள் செலுத்துகிற பிரீமியத்துக்குத் தகுந்த மாதிரி சிறந்த பாலிசியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.”
ராம், தாம்பரம்.
கே.ஆர். சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜி.வி.என். சங்கர் அண்ட் கோ.‘‘நீங்கள் தாம்பரத்திலிருக்கும் வீட்டை விற்று, கிண்டியில் வீடு வாங்கும்போது மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், சில விதிமுறைகளை அனுசரிக்க வேண்டும். தாம்பரத்தில் இருக்கும் வீட்டை வாங்கிய மூன்று வருடங்களுக்குள் அதை விற்க நேரிட்டால், அதற்கு குறுகிய மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, ஜூலை 30, 2012-ல் வீட்டை வாங்கி, ஜூலை 14, 2015-க்குள் விற்று இருந்தால், குறுகிய கால மூலதன ஆதாயம், வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்கு வரி செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல், தாம்பரத்தில் வாங்கப்பட்ட வீடு மூன்று வருடங்களுக்குமேல் ஆகியிருந்தால், அதை விற்று வரும் தொகையைக் கொண்டு நீங்கள் கிண்டியில் வீடு வாங்கும்போது, உங்கள் பெயரில் இன்னொரு வீடு சொந்தமாக இருந்தாலும் வரிச் சலுகை கிடைக்கும். ஒருவேளை நீங்கள் புதிதாக வாங்கப்போகும் வீட்டையும் சேர்த்து இரண்டு வீட்டுக்குமேல் உங்களுக்குச் சொந்த வீடு இருந்தால், நீங்கள் வீட்டை விற்ற மொத்த தொகைக்கும் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.’’
பச்சையப்பன்.
எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, பங்கு தரகர், சேலம். ‘‘ஜீவி ஃப்லிம்ஸின் பங்குகள் மிக அரிதாகத்தான் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகிறது. மேலும், இந்த நிறுவனப் பங்கின் முக மதிப்பு குறைந்திருப்பதால், இந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க வழியில்லை. சில ஆண்டு் களாக இந்த நிறுவனம் நஷ்டம் கண்டு வருவதால், ஏதாவது புதிதாக நடந்தால்தான் லாபம் கிடைக்கலாம்.”
{?}நான் கத்தாரில் வேலை செய்யும் எனக்கு இப்போது வயது 28. எனக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பென்ஷன் திட்டங்களைக் குறிப்பிடவும்.
அழகப்பன், கத்தார்.
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர். ‘‘உங்களுக்கு 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே ஓய்வுக்கால முதலீடுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி இருப்பது சரியான விஷயமே. நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்றும், அப்போது சராசரியாக ஆண்டு பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கும் என வைத்துக் கொள்வோம். இதைக் கருத்தில் கொண்டே உங்களின் 80 வயது வரைக்குமான தேவைகளை பூர்த்தி செய்கிற மாதிரி முதலீட்டைத் தீர்மானிக்க வேண்டும்
ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே உங்களின் ஓய்வுக்காலத்தை வளமாக மாற்ற போதுமானதாக இருக்கும். உங்களின் இன்றைய மாத செலவு ரூ.30,000 என தோராயமாக எடுத்துக் கொண்டால், 7% பணவீக்க விகிதத்தில் உங்களுக்கு 60 வயதில் ரூ.2.61 லட்சம் மாத செலவு இருக்கும். 80 வயது வரை வாழ்வீர்கள் என்கிற கணிப்பில் ரூ.5.72 கோடி தொகுப்பு நிதி வேண்டும். ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.6,120 வீதம் 32 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் போதும்.”
ரவிச்சந்திரன், பெரம்பலூர்.
தா.முத்துகிருஷ்ணன், வைஸ் வெல்த் அட்வைஸர்ஸ்.‘‘இன்றிலிருந்து 18 வருடத்துக்குள் ரூ.1.5 கோடி வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீண்ட கால முதலீட்டில், நல்ல ஈக்விட்டி ஃபண்டுகள் 18 சதவிகிதம் வரை வருடாந்திர வருமானம் தரக்கூடியவை. மாதம் ரூ10,000 வீதம் எஸ்ஐபி முறையில் 18 வருடங் களுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், உங்களின் இலக்கை அடைந்துவிடலாம். நீங்கள் பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் - ரூ.3,500. எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.3,500, சுந்தரம் செலக்ட் மிட் கேப் - ரூ.3,000.’’
Post a Comment