தேன், சாப்பிடுவது எப்படி ?

தேன், சாப்பிடுவது எப்படி ? எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக... என அன்றாடம் தேனைப் பயன்படுத்த...

தேன், சாப்பிடுவது எப்படி ?
எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக... என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதில்லை. எனவே, நல்ல தேனை எப்படிக் கண்டுபிடிப்பது... எப்படிச் சாப்பிடுவது? என்பது குறித்து சில தகவல்களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.
“தேன், பல மருத்துவ குணங்களைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீரைத்தான் விற்பனை செய்கிறார்கள். தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.
காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின்  மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது.
‘ஓடைத்தேன்’ என்பதுதான் இருப்பதிலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன்கூடுகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது. இதில் ஏதேனும் பழத்தைப் போட்டுவைத்தால், 200 ஆண்டுகளுக்குக் கூட கெடாது.  மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்துவதற்கு இந்தத் தேனைத்தான் பயன்படுத்துவர்.  மரங்களில் இருக்கும் தேன்கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன். பெரும்பாலும் கடைகளில் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன்தான். ஆனால், இதில் பொருட்களை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
தாம்பத்திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவிட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள்.
முகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்தபட்ட  பிரச்னை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்து விடும்.
பலாப்பழமும் தேனும் கலந்து சாப்பிட  முகம் பொலிவாகும். உடலில் நீர் அதிகமாக இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து.
சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.
வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது... ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்” என்ற அர்ஜுனன் நிறைவாக, “எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்.
- இ.ராஜவிபீஷிகா

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2923306779278836305

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item