தக்காளி புலாவ்!
தக்காளி புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - 250 கிராம் தக்காளி - 3 கொத்தமல்லித்தழை - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகு - 15 பெரிய வெங்காயம் ...
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
தக்காளி - 3
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகு - 15
பெரிய வெங்காயம் - 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பூண்டு - 2 (நசுக்கவும்)
இஞ்சி - 1 சிறிய துண்டு (நசுக்கவும்)
புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 2 டேபில்ஸ்பூன்
(பொடியாக நறுக்கவும்)
தாளிக்க:
எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 3
பிரிஞ்சி இலை - 2
செய்முறை:
பாஸ்மதி அரிசியைக் கழுவி தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும். மிக்ஸியில் தக்காளி, கொத்தமல்லித்தழை, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். இதை அரிசியோடு சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்துப் பொரிய விடவும். இதில் நசுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் வரை வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். அரிசியை இதில் சேர்த்து மென்மையாக வதக்கி, இரண்டு நிமிடம் கழித்து, 750 மில்லி தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். அரிசி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து மூடி போட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆற விடவும். தக்காளி புலாவவுக்கு ஆனியன் ரைத்தா அல்லது முட்டைக்கறி சூப்பர் சைட் டிஷ்.
Post a Comment