வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர் காயத்ரி சித்த மருத்துவர் க த்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக...

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்
காயத்ரி
சித்த மருத்துவர்
த்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவதிப்பட நேரிடும். நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த, வெட்டிவேர் உஷ்ண நோய்களை விரட்டும் வெற்றிவேராகவே இருக்கிறது. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வெட்டிவேர், பார்ப்பதற்குத் தேங்காய் நார் போல இருக்கும். இது, பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. டெங்கு காய்ச்சல் குணமாகப் பயன்படுத்தப்படும் நில வேம்புக் கஷாயத்தில், வெட்டிவேர் ஒரு முக்கிய மருத்துவப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. பல வாசனை வஸ்த்துக்களிலும் வெட்டிவேர் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 
வெட்டிவேரைத் தண்ணீரில் ஊறவைத்துப் பருகலாம். இரண்டு முதல் எட்டு கிராம் வெட்டிவேர் பொடியை, 250 மி.லி பானைத் தண்ணீரில் ஊறவிட்டு, இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, வடிகட்டிப் பருகலாம். 10-12 மணி நேரத்துக்குள், இந்த நீரைப் பயன்படுத்திவிட வேண்டும். மீண்டும், புதிய நீர் மற்றும் வெட்டிவேர் பொடியைப் பயன்படுத்தலாம். இதற்கு, வெட்டிவேர் ஊறல் நீர் என்று பெயர்.
வெக்கை சூட்டைத் தணிக்கும். அபரிமிதமான தாகத்தைத் தணிக்கும். உடலுக்கு, குறிப்பாகக் கண்களுக்குக் குளிர்ச்சிதரும். அஜீரணம், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பானப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.
மூல நோய், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் அருந்த ஏற்றது. சிறுநீரைப் பெருக்கும். வியர்வையை உண்டாக்கும்.
தொடர்ந்து பயன்படுத்திவர, மஞ்சள்காமாலை, காய்ச்சல், ஆண்மைக்குறைவு, கட்டி, கண்நோய் போன்றவை குணமாகும். அம்மை நோய்கள் அண்டாது. 
வெட்டிவேரைப் பொடியாக்கி, தண்ணீரில் குழைத்து, சருமத்தில் தடவிவர, உடல் எரிச்சல் நீங்கி, சருமம் பொலிவு அடையும். வெயிலால் வரும் சரும நோய்கள் நீங்கும். தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலையில் தேய்த்துவந்தால், உஷ்ணம் குறையும்.
திப்பிலி, வெட்டிவேர் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, நெய் சேர்த்து, சூரணம்போல் உருட்டிச் சாப்பிட்டு, சிறிது வெந்நீர் பருக, நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி தீரும்.
அரை டீஸ்பூன் வெட்டிவேர் பொடியுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிக்கட்டிப் பருகிவர, காய்ச்சல் குறையும்.
பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சளுடன் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, குளியல் பொடியாகத் தயாரிக்கலாம். இந்தப் பொடியை, தினமும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் குணமாகும். சிறந்த மணமூட்டியாகவும் செயல்படும்.
வெட்டிவேர் விற்பனைக்கு!
வெட்டிவேரில் செருப்பு, மாலை, தோரணம் எனப் பல்வேறு பொருட்கள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. முன்பு வெயில் காலத்தில், வெட்டிவேர் விசிறி அதிக அளவில் விற்பனையாகும்.  வெயில் காலத்தில் அதன்மீது நீர் தெளித்து, விசிறிக்கொண்டால், உடல் எரிச்சல், நா வறட்சி, மன சஞ்சலங்கள் மறையும். தற்போது, ஏ.சி, ஏர் கூலர் என மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, வெட்டிவேரும் ‘விண்டோ ஸ்க்ரீனாக’ அவதாரம் எடுத்துள்ளது. ஜன்னல் வழியே வரும் காற்று, ஈரமான வெட்டிவேர் ஸ்க்ரீன் மீது படும்போது, வெயிலுக்கு இதமாகக் குளிர் காற்றினைத் தருகிறது. நல்ல வாசம் மன அழுத்தத்தை குறைக்கும்.

Related

மூலிகைகள் கீரைகள் 5101743920230921394

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item