சமையல் சோடா, பேக்கிங் சோடா, என்ன வேறுபாடு?

சமையல் சோடா, பேக்கிங் சோடா, என்ன வேறுபாடு? ‘‘சமையல் சோடா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றுக்கு என்ன வேறுபாடு? இவற்றை எப்படி உபயோகிக்...

சமையல் சோடா, பேக்கிங் சோடா, என்ன வேறுபாடு?

‘‘சமையல் சோடா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றுக்கு என்ன வேறுபாடு? இவற்றை எப்படி உபயோகிக்கலாம்?’’

“சமையல் சோடா, பேக்கிங் சோடா இரண்டும் ஒன்றுதான். இது, சுத்தமான சோடியம்-பை-கார்பனேட். இதை மாவில் கலந்தவுடன் பலகாரங் களைச் சுட்டு விட வேண்டும். தாமதித்தால், அதிக பலன் இருக்காது. நீர்ப்பசையுடன் இருக்கும் மாவில், இவை சேர்க்கப்படும்போது அதிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே கொண்டு வந்து, பலகாரங்களை (பஜ்ஜி, பாதுஷா போன்றவை) உப்பச் செய்கின்றது.

பேக்கிங் பவுடரில் சோடியம்-பை-கார்பனேட்டுடன், ஒரு வித மாவுச்சத்தும் சேர்க்கப்பட்டிருக்கும். கேக், பிரட் முதலியன செய்ய பேக்கிங் பவுடர் உபயோகிப்பார்கள்.

வீட்டில் உபயோகிக்கும்போது, இப்பொருட் களை மிகக்குறைந்த அளவில் உபயோகிப்பது நல்லது. பேக்கிங் சோடாவை, குளியலறை, சமையலறை ஸிங்க், டைல்ஸ் பதித்த தரை, கறை படிந்த பாத்திரங்கள், வெள்ளிச் சாமான்கள், காஃபி மேக்கர், வாஷிங் மெசின் ஆகியவற்றைச் சுத்தப்படுத்தவும் உபயோகிக்கலாம்.”
‘‘சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, பராத்தா மற்றும் நாண் இவற்றின் தயாரிப்பில் உள்ள வேறுபாடுகள் என்ன?’’

“எல்லாமே கோதுமை மாவில் தயாரிக்கப் பட்டாலும், செய்முறைகளும் சுவையும் வேறுபடும். அனைத்துக்கும் மாவைப் பிசைந்து 2 மணி நேரங்கள் ஊறவிட வேண்டும்.

சப்பாத்தி: கோதுமை மாவுடன் சிறிது எண்ணெயும் உப்பும் கலந்து தண்ணீர் சேர்த்து அழுத்திப் பிசைந்து ஊற விட்டு, பிறகு வட்டமாகத் திரட்டிச் செய்வது சப்பாத்தி. எண்ணெய் சேர்க்காமல் செய்தால், ஃபுல்கா அல்லது வரட்டுச் சப்பாத்தி.

ரொட்டி: 2 ஸ்பூன் நெய்யுடன் தேவையான உப்பு அல்லது 2 சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்கு குழைத்து, 2 கப் கோதுமை மாவைச் சேர்த்து அழுத்திப் பிசைந்து மூடி வைக்கவும். இதை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொன்றையும் உள்ளங்கை அளவுக்கு வட்டமாகத் திரட்டி... நெய் தடவி, இரண்டாக மடித்து மீண்டும் இரண்டாக மடித்து, முக்கோண வடிவமாக்கவும். பிறகு, இவற்றை மாவில் புரட்டி, வட்டமாகத் தேய்த்து கல்லில் நெய் ஊற்றி சுடவும். ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு மேலே சிறிது நெய் ஊற்றி வேக விட்டு எடுத்தால் ரொட்டி தயார். இதை வட இந்தியாவில் ‘பராத்தா’ என்பார்கள். பிளெயின் பராத்தா தவிர, உருளைக்கிழங்கு மசாலா,  புதினா, வெங்காயச் சட்னி வகைகள், வெந்தயக்கீரை மசாலா முதலியவற்றை பராத்தா நடுவில் வைத்து, வட்டமாகத் திரட்டி, ஆலு பராத்தா, மேத்தி பராத்தா போன்ற ஸ்டஃப்டு பராத்தாவாகவும் செய்யலாம்.
பரோட்டா: ரொட்டி தயாரிப்பதற்கான மாவு போலவே இதற்கும் பிசைய வேண்டும் இந்த மாவை இரண்டு பாகமாக்கி, ஒவ்வொன்றையும் ஒரு சப்பாத்தியாகத் திரட்டிக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவை இரண்டு ஸ்பூன் நெய்யில் நன்கு குழைத்து (இதை பதிர் என்பார்கள்) ஒவ்வொரு வட்ட சப்பாத்தியின் மேலும் தடவி, ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, பாய் போல சுருட்டி, துண்டுகளாக்கவும். ஒவ்வொரு துண்டையும் வட்டமாகத் திரட்டி, நெய் விட்டு, தவாவில் சுட்டு எடுத்தால் பரோட்டாக்கள் ரெடி.

நாண்: 2 கப் மைதா மாவு, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை, கால் கப் தயிர், அரை ஸ்பூன் சமையல் சோடா ஆகியவற்றைக் கலந்து... ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர்விட்டு, அழுத்திப் பிசைந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை 5 அல்லது 6 திக்கான வட்டச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேல் பக்கமும், தண்ணீரைத் தடவி, சூடான தவாவில் ஈரமான பக்கம் படும்படி போட்டு வேகவிடவும். மேல் பாகம் நிறம் மாறத் தொடங்கியதும், கீழ் பாகம் வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். தவாவைத் திருப்பி, சாய்த்து பிடித்தபடி, சப்பாத்தியை  நேரடியாகத் தீயில் காட்டினால், மேல் பாகமும் வெந்து விடும் (சப்பாத்தி கீழே விழாது). பிறகு, தவாவிலிருந்து நாணை எடுத்து, நெய் தடவி பரிமாறவும். தந்தூரி அடுப்பு இல்லாமலே சுலபமாக இப்படி நாண் தயாரித்து விடலாம்.”

‘‘குலோப்ஜாமூனை, கடையில் அதற்கான பவுடர் வாங்கித்தான் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே செய்ய முடியாதா?’’

‘‘செய்யலாமே! இனிப்பில்லாத பால் பவுடர் ஒரு கப், மைதா ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த சர்க்கரை-ஒரு ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை ஆகியவற்றைக் கலந்து, சிறிது உருக்கின நெய் விட்டுப் பிசையவும். அழுத்திப் பிசையக் கூடாது. தேவையானால், பால் தெளித்துக் கொள்ளலாம். தாமதிக்காமல் உருண்டைகளாக உருட்டி எண்ணெ யில் பொரிக்கவும். சர்க்கரையையும் தண்ணீரையும் சம அளவில் கலந்து ஜீரா தயாரித்து பொரித்த உருண்டைகளை அதில் ஊற விட்டால் குலோப் ஜாமுன் தயார். விருப்பப்பட்டால் ஜீராவில் ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.”
‘‘காய்களை உபயோகித்து இனிப்பு செய்வதைப் போல், பழங்கள் உபயோகித்து காரமான பதார்த்தங்கள் என்ன தயாரிக்கலாம்?’’

“சற்றே காய்வெட்டாக இருக்கும் பப்பாளி, புளிப்பான ஆப்பிள், திராட்சை இவற்றைத் துண்டுகளாக்கி... கடுகு தாளித்த எண்ணெயில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வதக்கி ஊறுகாய் செய்யலாம். சிறிய மாம்பழங்களைத் தோல் சீவி, மோர்க்குழம்பில் வேக விடலாம். அன்னாசிப் பழம், முழுவதும் பழுக்காத ஆப்பிள், கிர்ணிப் பழம் போன்றவற்றை தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, மிளகுப்பொடி, உப்புத் தூவி, ஸாலட் போல சாப்பிடலாம்.

ஆப்பிள், அன்னாசித் துண்டுகளுடன் துருவிய கேரட், துருவிய கோஸ், முளை கட்டிய பச்சைப் பயறு, சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி ஸாலட் தயாரிக்கலாம். மாதுளம்பழ முத்துக்களை, தயிர் சாதம், ஸாலட் வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

Related

சமையல் அரிச்சுவடி 2873869036300815122

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item