வலிமிகுந்த குதிக்கால் அழற்சி!

வலிமிகுந்த குதிக்கால் அழற்சி! குதிவாதம் என்றால் என்ன ? பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாக...




குதிவாதம் என்றால் என்ன?
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும். உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும். இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர். அது பாதத்தின் வில் போன்ற வளைவினை தாங்கி உறுதியளிக்கிறது. தசைநார் பட்டையில் ஏற்படும் சிறிய காயங்கள் அழற்சியை மற்றும் ஏனைய நோய்க்குறிகளை ஏற்படுத்தவல்லவை. இக்காயங்கள் வழமையில் குதிக்கால் எலும்புக்கு அருகிலேயே ஏற்படுகின்றன.

குதிக்கால் அழற்சியின் அறிகுறிகள் எவை?

பிரதான நோய்க்குறி வலியாகும். இது குதிக்கால் அடியில் எவ்விடத்திலும் வரலாம். பொதுவாக வலிக்குரிய பிரதான காரணமாக ஒரு குறித்த இடம் இனங்காணப்படலாம். இது அநேகமாக குதியிலிருந்து 4 சென்றிமீற்றர் முன்னோக்கி தொட முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். வழமையில் காலை நிலத்தில் வைக்கும் போது நோவு சிறிது குறையும். இருப்பினும் காலை எழுந்தவுடன் முதன் முதலில் கால் நிலத்தில் ஊன்றி நடக்கும் போது வலி மிக அதிகமாக இருக்கும். தொடர்ந்து நடக்கும் போது வலி அவ்வளவு இருக்காது. ஆனால் நீண்டதூர நடைப்பயணம் வலியை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும். திடீரென காலை கடின அசைவுகளுக்கு உட்படுத்தும் போது உதாரணமாக படிக்கட்டுகளில் நடக்கும் போது அல்லது பெருவிரல் நுனியால் நடக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வலி அதிகரிக்கும்.

குதிக்கால் அழற்சி எவர் எவர்க்கு ஏற்படலாம்?

இது மிகவும் பொதுவானது. பிரதானமாக 40வயதிற்கு மேற்பட்டவர்களை அதிலும் பெண்களை அதிகம் பீடிக்கிறது. விளையாட்டு வீரர்களிடையேயும் இது பொதுவாக காணப்படுகிறது. அத்துடன் பின்வரும் நிலைமைகள் இந்நோயை ஏற்படுத்தவல்லவை.

1)
வழமையை விட அதிகமான நடத்தல், ஓடுதல், நீண்ட நேரம் நிற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல். 2) மிருதுத்தன்மை அதிகமற்ற காலணிகளை அணிதல்.

3)
திடீர் நிறை அதிகரிப்பு, அளவுக்கதிகமான நிறை என்பன குதிப்பகுதிக்கு மேலதிக சிரமத்தை தோற்றுவிக்கும். 4) உள்ளங்காலினை மிதமிஞ்சி பயன்படுத்தல் அல்லது அளவுக்கதிகமாக நீட்டல் உதாரணமாக விளையாட்டு வீரர்கள் அதிக தூரம் ஓடுதல் அல்லது அளவுக்கு மீறிய ஓட்டம். 5) குதிக்கால் தசைநார் இறுக்கமடைதல்



(
குதிக்காலின் மேலாக பின்காலில் தசைப் பகுதியின் அடிப்பாகத்தில்) வயது முதிர்ந்தவர்கள் விடயத்தில் உடனடி காரணம் ஒன்றிருக்கும். குதிக்கால் எலும்பில் வளர்ச்சி ஏற்பட்டதாக (இச்டூஞுச்ணஞுதட்) நம்புவர். பலர் விடயத்தில் ஒரு குதிமுள் இருப்பதுண்டு. ஆனால் நோவுக்கு அது வழமையில் காரணமல்ல.

குதிக்கால் அழற்சிக்கான சிகிச்சைகள் எவை?

வழமையில் வீக்கம், வலி காலப் போக்கில் குறைவடைந்து விடும்.

உள்ளங்கால் தசை இழையங்கள் எலும்பை சூழவுள்ள இழையங்களைப் போல் மெதுவாகவே குணமடையும். இதற்கு பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் செல்லலாம். இருப்பினும் பின்வரும் முறைகளில் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இம்முறைகளில் மிக துரிதமாக ஒரு சில வாரங்களிலே குணமடையலாம். 1) பாதத்தினை கூடியவரை ஓய்வில் வைத்திருக்கவும், அளவுக்கு மீறிய நடத்தல், நிற்றல், ஓடுதல் செயற்பாடுகளை, பாதத்தினை நீட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும். மெதுவான நடை மற்றும் பயிற்சிகள் நன்மையளிக்கும். அவை கீழே தரப்பட்டுள்ளன.

2)
பாதணிகள் வெறும் காலுடனோ அல்லது கரடுமுரடான தரையிலோ நடக்க வேண்டாம். மிருதுத் தன்மையான குதிப்பகுதியுடைய சப்பாத்துகளை சிறந்த வில் போன்ற வளைவுடைய பாதணிகளை தெரிவு செய்யவும். திறந்த பாதணிகளை விட லேஸினால் தைக்கப்பட்ட பாதணிகள் விளையாட்டுக்கு உகந்தவை. பழைய அல்லது கிழிந்த சப்பாத்துகளை தவிர்க்கவும். அவை மிருதுத்தன்மையை அளிக்க மாட்டாது.

3)
குதி உயர்ந்த பாதணிகள் குதிக்காலிற்கு பஞ்சு போன்று மிருதுத் தன்மையான பாதணிகளை எங்கும் வாங்கலாம் அல்லது இது போன்றவற்றை சப்பாத்துக்களில் இடுவதும் நன்மையளிக்கும். மென்மையான துணி வகைகளை பயன்படுத்தவும் இதன் நோக்கம் குதிப் பகுதியை ஒரு செ.மீற்றரினால் உயர்த்துவதாகும். குதி மிகவும் மென்மையானதாக இருக்குமானால் அப்பகுதி பதியக் கூடிய நைவுகாப்பு உறையில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி விடலாம். இதனால் மிருதுவான குதியின் பகுதி சப்பாத்தின் உட்புறத்தில் பதியமாட்டாது.

4)
பரசிற்றமோல் போன்ற நோவாற்றிகள் நோவை குறைப்பன. சிலவேளைகளில் வீக்கத்தடுப்பு மருந்துகள் (ஐஞதணீணூணிஞூஞுண போன்ற) பயன்தருவன இவையும் நோவாற்றிகள் தாம். ஆயினும் வீக்கத்தை தடுப்பதுடன் சாதாரண நோவாற்றிகளிலும் சிறந்தவை. சிலர் வீக்கத்தடுப்பு மருந்து கலந்துள்ளவையான கிறீம் வகைகளை பூசி நோவை ஆற்றுவதும் உண்டு.

5)
பயிற்சிகள் : மெதுவாகவும் ஒழுங்கு தவறாமலும் குதிக்கால் தசை நார்ப் பகுதியை நிமிர்த்துதல் வேண்டும். இதன்போது உள்ளங்கால் தசைநார் ஆழ் தசைப்பட்டை நோவை தளர்த்தும். காரணம் உள்ளங்கால் பஸ்சிரிஸ் உள்ள சிலருக்கு குதிக்கால் தசைநார் இறுக்கமடைந்திருக்கிறது. இதனால் குதிக்காலின் பின்பகுதி இழுப்பது போலிருக்கும். அத்துடன் உள்ளங்கால் தசை நார் சூழ் தசைப்பட்டையை இறுக்கமடையவும் செய்து விடும். அத்துடன் நீங்கள் இரவு முழுவதும் உறங்கும் வேளைகளில் உள்ளங்கால் தசை நார்ப்பட்டை தானாக இறுக்கமடைந்து விடுகிறது. (இதனாலேயே காலையில் நோவு அதிகமாகிறது) பின்வரும் பயிற்சிகள் நிவாரணம் தருவன.

1.
ஒரு சுவரிலிருந்து 2 3 அடி விலகி நிற்கவும், பாதங்கள் குதிக்கால் நிலத்தில் ஊன்றியபடி முழங்கால்களை நிமிர்த்தி வைத்துக் கொண்டு சுவருடன் சாயவும். பின் காலின் தசைப் பகுதியும், குதிக்கால் தசை நாரும் இறுக்கமாக இருக்கும். சில வினாடிகளுக்கு இவ்வாறு நிற்கவும். 10 தடவைகள் இவ்வாறு செய்யவும். நாளொன்றுக்கு 5, 6 தடவைகள் இவ்வாறு செய்யலாம்.

2.
முழங்கால் 90 பாகையில் மடிந்திருக்கும், பாதங்களும், குதிக்கால்களும் நிலத்தில் நன்றாக பதியும்படியும் ஒரு இருக்கையில் அமரவும். இப்பொழுது குதிக்கால்கள் அப்படியே இருக்க பாதங்களை மேல்நோக்கி உயர்த்தவும். இப்பொழுதும் குதிக்கால் தசை நார்களும் பின் கால் தசைப் பகுதியும் இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள். இதனால் சற்று வேறுபட்ட தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வந்து சில வினாடிகள் அமர்ந்திருங்கள். இவ்வாறு 10 தடவைகளும் நாளொன்றுக்கு 5, 6 தடவைகளும் செய்தல் வேண்டும்.

இப்பயிற்சியின் நோக்கம் தசை நார்களையும், தசை நார் சூழ் தசைப்பட்டையையும் குதிக்காலிலிருந்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மெதுவாக தளரச் செய்வதாகும். ஒரு ஆய்வின்படி நீட்டி நிமிர்த்தும் பயிற்சிகள் பெரும் பயனை அளித்துள்ளன.

3.
ஊக்கமருந்துகள் மேற்படி பயிற்சிகளுக்கு குணப்படாத நோவுகளுக்கு ஸ்ரீரொய்ட் ஊசி மருந்துகளை கொடுக்கலாம். இதனால் பல வாரங்களுக்கு நோவிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை பிரச்சினை தீர்ந்தும் விடலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் இது வெற்றியளிப்பதில்லை. ஸ்ரீரொய்ட்ஸ் வீக்கத்தை தடுத்து நிறுத்தும். சில வேளைகளில் முதலாவது ஊசிக்கு குணமேற்படாத நிலையில் மேலும் சில ஊசிகள் ஏற்றப்படலாம். பிற சிகிச்சைகள்: சிலர் இரவில் பன்டேஜ் போட்டுக் கொண்டு நன்மையடைகிறார்கள். இதனால் உள்ளங்கால் தசைப்பட்டை இறுக்கமடைவது தடைப்படலாம். (பென்டேஜ் கட்டுவதால் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் கிட்டுகின்றன) சிக்கலான நிலைமைகளில் காலின் கீழ்ப்பகுதிக்கு ஒரு பிளாஸ்ரர் போடப்படுகிறது. இது ஓய்வு, பாதுகாப்பு, பஞ்சணைப்பது போன்ற நிலை, சிறிதளவு நீட்டுவது, நிமிர்த்துவது போன்ற நிலையை உள்ளங்கால் தசைப்பட்டைக்கு குதிக்கால் தசை நார்களுக்கு ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் முன்ரும் பின்னரும் ஐஸ் மசாஜ் ஏற்பாடு செய்கின்றனர்.

அறுவைச் சிகிச்சை: மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளால் 12 மாதங்களுக்கு மேலாக குணப்படாத நிலையிலேயே அறுவைச் சிகிச்சை சிபார்சு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை எப்போதும் வெற்றியளிப்பதில்லை. சிலருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் இதனை இறுதித் தீர்வாகவே கருதலாம்.

Related

மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது ஒரு எளிய உடற்பயிற்சி!!

மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது ஒரு எளிய உடற்பயிற்சி!! மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டம். மேலைநாடுகளில் 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட...

உங்களுக்காக எளிமையாக ஒரு யோகா பாடம்....

செலவு -சில நிமிட ஆசனம்...வரவு -பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ! உங்களுக்காக எளிமையாக ஒரு யோகா பாடம்.... 'எப்பப் பார்த்தாலும்... கிச்சன், குழந்தைகள், கணவன், சினிமா, சீரியல்கள், அலுவலகம், அரசியல் என்று ...

இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!!

இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!! பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பா...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Sunday - Mar 16, 2025 3:06:1 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,131,923

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item