30 வகை ஃப்ரூட் சமையல்!

30 வகை ஃப்ரூட் சமையல் 'ஆ ப்பிள் எ டே கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது ஆங்கிலப் பொன்மொழி. ஆப்பிள் மட்டுமல்லாமல், அனைத்துப் பழங...

30 வகை ஃப்ரூட் சமையல்
'ஆப்பிள் எ டே கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது ஆங்கிலப் பொன்மொழி. ஆப்பிள் மட்டுமல்லாமல், அனைத்துப் பழங்களுமே, விட்டமின் உட்பட உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை அள்ள அள்ளக் குறையாமல் வாரி வழங்கும் அட்சயப்பாத்திரங்கள்தான்!
'பழங்கள் என்றால்... அப்படியே சாப்பிடலாம், ஜூஸ் செய்து பருகலாம் அல்லது சில பழங்களை நறுக்கி ஃப்ரூட் சாலட் செய்யலாம்’ என்ற பொதுக்கருத்தை மாற்றி, பழங்களை வைத்து பிரியாணி, ஊறுகாய், புட்டு, கேசரி, கிரேவி, பக்கோடா என்று விதம்விதமாக செய்துகாட்டி அசத்தும் சமையல்கலை நிபுணர் கவிதா நாகராஜ், 'உங்கள் இல்லத்தில் உணவு வேளை, உற்சாக வேளையாக விளங்கட்டும்!' என்று அன்புடன் வாழ்த்துகிறார்.

பலாப்பழ பிரியாணி
தேவையானவை: பலாச்சுளை  ஒரு கப் (சதுரமாக நறுக்கவும்), பாசுமதி அரிசி -  2 கப், பிரியாணி மசாலா  ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி  பூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய்  தலா - 2, பிரிஞ்சி இலை -  2, முந்திரி, உலர் திராட்சை  தலா - 2 டீஸ்பூன், வறுத்து எடுத்த வெங்காயம்  ஒரு கப், ரீஃபைண்ட் ஆயில், நெய்  தலா - 2 டேபிள்ஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை  தலா அரை கப், மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டீஸ் பூன், எலுமிச்சைச் சாறு  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, முந்திரி  உலர்திராட்சையையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி  பூண்டு பேஸ்ட், நறுக்கிய பலாச்சுளை சேர்த்து, மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். வறுத்த வெங்காயம், நெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை இதில் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கவும்.
இதனை வெங்காயம்  தயிர் ராய்த்தாவுடன் பரிமாறலாம்.

ஆப்பிள்  வால்நட் க்ரெஞ்ச்
தேவையானவை: ஆப்பிள் -  2, வால்நட் (அக்ரூட்)  அரை கப், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) -  2 டீஸ்பூன், மைதா மாவு  ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர்  அரை டீஸ்பூன், சர்க்கரை  அரை கப், ஐஸ்க்ரீம் -  2 டீஸ்பூன், நறுக்கிய பிஸ்தா  அரை டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு.
செய்முறை: ஆப்பிளை தோல் நீக்கி, 4 துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி...  கரைத்து வைத்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை நனைத்துப் போட்டு, 4 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். சர்க்கரையை ஒரு பேனில்’ போட்டு, தண்ணீர் ஊற்றாமல் அடுப்பில் வைத்து, இளகும் வரை (பிரவுன் கலர் ஆகும் வரை) வைக்கவும். ஆப்பிள் துண்டுகளை சர்க்கரைப் பாகில் தோய்த்து எடுக்கவும். பிறகு, அவற்றை  ஐஸ் வாட்டரில் நனைத்து எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும். மீதமுள்ள சர்க்கரைப் பாகில் வால்நட்டை போட்டு புரட்டி, ஆறியதும் ஒன்று இரண்டாக பொடிக்கவும். ஆப்பிள் துண்டின் மேல் சிறிது ஐஸ்கிரீம் போட்டு அதன் மீது வால்நட் தூளை தூவி, பிஸ்தாவையும் தூவி பரிமாறவும்.

பலாப்பழ ஊறுகாய்
தேவையானவை: பலாப்பழம்  அரை கிலோ, மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், கறுப்பு சீரகம்  ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம், பிளாக் சால்ட்  தலா ஒரு டீஸ்பூன், கடுகு எண்ணெய் - 125 கிராம், உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: பலாப்பழத்தை துண்டுகளாக்கி வெயிலில் 2 மணி நேரம் காயவைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், பிளாக் சால்ட், கடுகு, வெந்தயம், கறுப்பு சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, அத்துடன் பலாப்பழ துண்டுகள், உப்பு சேர்த்து பாட்டிலில் போடவும். கடுகு எண்ணெயைக் காயவைத்து, ஆறியதும் அந்தக் கலவையில் கொட்டி நன்கு குலுக்கவும்.
இதை பல நாட்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

கிவி ஐஸ்க்ரீம்
தேவையானவை: கிவி பழம் (நறுக்கியது)  ஒரு கப், பைனாப்பிள் ஜூஸ் -  2 கப், சர்க்கரை  அரை கப்.
செய்முறை: அரை கப் கிவி பழத்தை கூழாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் வைத்து கூழ்பதத்துக்கு வந்தவுடன் இறக்கவும். ஆறியதும் மீதமுள்ள கிவி பழத்துண்டுகளை சேர்த்து, சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

 முந்திரி  கிவி குருமா
தேவையானவை: வெங்காயம் (நறுக்கியது)  ஒரு கப், இஞ்சி  பூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை  அரை கப், கிவி பழம் - 2 (அரைக்கவும்), தேங்காய்ப்பால்  ஒரு கப், முந்திரி -  4 டேபிள்ஸ்பூன் (வேகவைக்கவும்), கெட்டித் தயிர்  அரை கப், பச்சை மிளகாய்  - 4 (பொடியாக நறுக்கவும்), கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள்  தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி  பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், அரைத்த கிவிப்பழக் கூழ், உப்பு சேர்த்து  வதக்கி, கெட்டித் தயிரைச் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேகவைத்த முந்திரி சேர்த்து நன்கு வதங்கியதும், தேங்காய்ப் பாலை ஊற்றி நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து, பின்பு கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

பட்டர் ஃப்ரூட் பரோட்டா
தேவையானவை: பட்டர் ஃப்ரூட் (அவக்காடோ) கூழ்  ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித் தழை  சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம்  அரை கப், சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய்  தலா - 2 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயம், பட்டர் ஃப்ரூட் கூழ் ஆகிவற்றை சேர்த்து பரோட்டா மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். மாவை வட்ட வடிவத்தில் திரட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பரோட்டாவை போட்டு, இரு புறமும் சிவந்ததும், சிறிது நெய் தடவி எடுத்துப் பரிமாறவும்.

சாக்லேட் டிப்டு ஸ்ட்ராபெர்ரி
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி பழம்  ஒரு கப் (இலையுடன் உள்ளது), மெல்டட் சாக்லெட்  ஒரு கப், வெண்ணெய்  ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி துணியில் துடைத்துக் கொள்ளவும். மெல்டட் சாக்லேட்டுடன் வெண்ணெயை சேர்க்கவும். இதில் பழத்தை நன்கு 'டிப்’ செய்து (மூழ்கவைத்து), எடுத்து 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

அவக்காடோ பச்சடி
தேவையானவை: நறுக்கிய அவக்காடோ  ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் - 5, புளி  சிறிய உருண்டை, சீரகம்  அரை டீஸ்பூன், கெட்டித் தயிர்  அரை கப், கடுகு  அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாக கரைத்து, அத்துடன் நறுக்கிய அவக்காடோ, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கெட்டித் தயிர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதனை பிசைந்து வைத்த கலவையில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

மாம்பழ அல்வா
தேவையானவை: மாம்பழக் கூழ்  ஒரு கப், ரவை, சர்க்கரை, நெய்  தலா அரை கப், பொடியாக நறுக்கிய முந்திரித் துண்டுகள் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன்,  தண்ணீர்  ஒரு கப்.
செய்முறை: அடுப்பில் கெட்டியான வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு சூடாக்கி, ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகு காய்ச்ச வும். வறுத்த ரவையை அதில் சேர்த்து வேகும் வரை கிளறி, மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி வேகவிட்டு, நெய் பிரிந்து வரும்போது இறக்கி, முந்திரி சேர்த்துப் பரிமாறவும் (கேக் போல துண்டுகள் போட்டும் பரிமாறலாம்).

தர்பூசணி  கிர்ணிப் பழம் சாலட்
தேவையானவை: தர்பூசணி, கிர்ணிப் பழம் ('ஸ்கூப்பர்’ மூலம் எடுத்தது)  தலா ஒரு கப், ஆரஞ்சு சாறு  அரை கப், பிளாக் சால்ட்  அரை டீஸ்பூன், மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், செலரி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)  அரை டீஸ்பூன், தேன், எலுமிச்சைச் சாறு  தலா ஒரு டீஸ்பூன், உப்பு  சிறிதளவு.
செய்முறை: ஒரு   பெரிய கப்பில் ஸ்கூப் பண்ணிய தர்பூசணி, கிர்ணிப்பழத்தை வைக்க வும். மற்றொரு கப்பில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை  சாறு, செலரி, பிளாக் சால்ட், மிளகுத்தூள், தேன், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து, ஸ்கூப் செய்த பழங்களுடன் கலக் கவும். சிறிய கப்களில் போட்டுப் பரிமாறவும்.

ஆப்பிள் பர்ஃபி
தேவையானவை: துருவிய ஆப்பிள் - 2 கப், தேங்காய்த் துருவல்  ஒன்றரை கப், சர்க் கரை  அரை கப், சீவிய பிஸ்தா  ஒரு டேபிள்டீஸ்பூன், நெய்  ஒரு டேபிள்டீஸ்பூன், உப்பு  ஒரு துளி.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு காய வைத்து... தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பி, சீவிய பிஸ்தாவை தூவவும். ஆறியதும் துண்டுகளாக்கி சாப்பிடவும்.

மாம்பழ கேக்
தேவையானவை: மாம்பழக்கூழ்  அரை கிலோ, பொடித்த சர்க்கரை  ஒரு கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு கெட்டியான பாத்திரத்தில் மாம்பழ கூழ், சர்க்கரை பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும். வெந்ததும், நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைப் போட்டு பரப்பி, நன்கு ஆறியதும், துண்டுகள் போட்டு பரிமாறவும்.

மாம்பழ கொத்சு
தேவையானவை: மாம்பழம்  ஒன்று, வெந்தயம்  கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, மல்லி (தனியா)  தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 6, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்  சிறிதளவு, புளி  நெல்லிக்காய் அளவு, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் தாளித்து, மாம்பழத்தைச் சேர்த்து குழைய வேகவிடவும். வெந்த மாம்பழக் கலவையில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஆரஞ்சு ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், ஆரஞ்சுப் பழச்சாறு - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்  ஒரு கப், இஞ்சி  பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சர்க்கரை  கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, நெய்  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும். குக்கரில் சிறிதளவு நெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், இஞ்சி  பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஆரஞ்சுப் பழச்சாறு, களைந்த அரிசி, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

லிச்சி ஃப்ரூட் பாசந்தி
தேவையானவை: லிச்சி பழம்  ஒரு கப் (தோல் உரித்து, கொட்டை நீக்கியது), பால்  ஒரு லிட்டர், சர்க்கரை  கால் கப், குங்குமப்பூ  சிறிதளவு, நெய்  ஒரு டீஸ்பூன், பாதாம் - 6 (சீவவும்).
செய்முறை: கெட்டியான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி, கால் லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சவும். அத்துடன் லிச்சி பழத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பிறகு, சர்க்கரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சீவிய பாதாம் பருப்பு, குங்குமப்பூ தூவி, ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

பப்பாளி கேசரி
தேவையானவை: ரவை  ஒன்றரை கப், நறுக்கிய பப்பாளித் துண்டுகள்  ஒரு கப், காய்ச்சி ஆறவைத்த பால்  ஒரு கப், சர்க்கரை - 2 கப், முந்திரிப் பருப்பு, உலர்திராட்சை (சேர்த்து) -  2 டேபிள்ஸ்பூன், நெய் -  3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள்  ஒரு சிட்டிகை.
செய்முறை: பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெறும் வாணலியில் ரவையை வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரிப் பருப்பு, உலர்திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் அதே வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் ரவை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி வேகவிடவும். பின்னர் அரைத்த பப்பாளி விழுது, சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

ஆரஞ்சு கத்லி
தேவையானவை: ஆரஞ்சு சுளைகள் -  2 கப், முந்திரி - 200 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: முந்திரியை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஆரஞ்சை ஜூஸாக்கி  இதனுடன் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி, சர்க்கரை, அரைத்த முந்திரி  ஆரஞ்சு விழுது சேர்த்துக் கிளறி, தீயை மிதமாக வைத்து, நெய் விட்டு நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியானதும் தட்டில் போட்டு பரப்பி, ஆறவிட்டு துண்டுகள் போடவும்.
விருப்பப்பட்டால் ஆரஞ்சு ஃபுட் கலர் ஒரு சிட்டிகை சேர்த்துக்கொள்ளலாம்.

தர்பூசணி பக்கோடா
தேவையானவை: தர்பூசணி (வெண்மையான அடிபாகத்தை மட்டும் எடுத்து துருவிக்கொள்ளவும்)  அரை கப், சோள மாவு - 25 கிராம், அரிசி மாவு - 25 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம்  ஒரு கப், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், புதினா இலை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: துருவிய தர்பூசணியுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், புதினா, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்கு  மாதுளம்பழ குல்சா
தேவையானவை: வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு  அரை கப், கோதுமை மாவு - 2 கப், மாதுளை முத்துக்கள்  அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்  அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்  தலா அரை டீஸ்பூன், நெய் -  2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: அகலமான பாத்திரத் தில் கோதுமை மாவு, எண்ணெய், சிறிது உப்பு, சிறிது சீரகத்தூள், சிறிது கரம்மசாலாத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு மாவை இளக்க மாக பிசைந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், மீதமுள்ள சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்துகொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, குழி செய்து அதனுள் சிறிதளவு மாதுளை கலவையை வைத்து வட்டமாக தேய்க்கவும். இதுதான் குல்சா. தவாவில் சிறிது நெய்விட்டு குல்சாவை சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

ஃப்ரைடு நூடுல்ஸ் வித் சாஸ்
தேவையானவை: பிளெய்ன் நூடுல்ஸ்  ஒரு கப், நறுக்கிய பழம்  ஒரு கப் (ஆப்பிள், கிவி, பைனாப்பிள், மாம்பழம், திராட்சை), பூண்டு - 4 பல் (நறுக்கியது), வெண்ணெய் - 2 டீஸ்பூன், மைதா  ஒரு டீஸ்பூன், சீஸ்  ஒரு க்யூப், பால்  அரை லிட்டர், எண்ணெய், உப்பு  சிறிதளவு.
செய்முறை: நூடுல்ஸை வேகவிட்டு, நீரை வடித்து நன்கு ஆறவிட்டு, எண்ணெ யில் பொரித்தெடுக்கவும். அடுப்பில் ஒரு ’பேன்’ பாத்திரத்தை வைத்து வெண்ணெய் சேர்த்து, உருகியதும் பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மைதாவை சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி, பாலை ஊற்றிக் கிளறி, சிறிது உப்பு சேர்த்து சாஸ் பதத்துக்கு வந்தவுடன் பழங்களைச் சேர்த்துக் கலந்து, துருவிய சீஸ் தூவி இறக்கவும். இதனை ஃப்ரைடு நூடுல்ஸ் உடன் சேர்த்து சாப்பிடவும்.

பனானா கேக்
தேவையானவை: வாழைப்பழ கூழ்  அரை கிலோ, சர்க்கரை  முக்கால் கிலோ, சிட்ரிக் ஆசிட்  கால் டீஸ்பூன், உப்பு  அரை டீஸ்பூன், வெண்ணெய் - 125 கிராம், வெனிலா எசன்ஸ்  சில துளிகள்.
செய்முறை: வாழைப்பழ கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கனமான வாணலியில் கலந்துகொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி சீராக கிளறிவிடவும். பாத்திரத்தின் ஓரங் களை விட்டு கூழானது நடுவில் உருண்டை போல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கலர் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதை வெண் ணெய் தடவிய தட்டில் போட்டு, ஆறவிடவும். பிறகு, துண்டுகளாக வெட்டி பட்டர் பேப்பரில் சுற்றி வைத்து பரிமாறவும்.

ஆரஞ்சு குழம்பு
தேவையானவை: ஆரஞ்சு பழத் துண்டுகள்  ஒரு கப் (தோல், கொட்டைகளை நீக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  தலா சிட்டிகை, கடுகு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, புளி  எலுமிச்சையளவு, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளிக்கவும். பின்னர் ஆரஞ்சுப்பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
சாதம் மற்றும் பொங்கலுக்கு ஏற்ற குழம்பு இது.

வாழைப்பழம்  குல்கந்த் ஐஸ்கிரீம்
தேவையானவை: ஏலக்கி வாழைப்பழம்  ஒரு கப் (வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்), குல்கந்த் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  அரை கப், முந்திரி, உலர்திராட்சை (சேர்த்து) - 4 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம்  ஒரு கப், வெண்ணெய் - 4 டீஸ்பூன், வாழை இலை துண்டுகள்  சிறிதளவு
செய்முறை: ஒரு பெரிய கப்பில் வாழைப்பழத் துண்டுகளுடன் குல்கந்த், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கலக்கவும். வாழை இலை துண்டுகளை சுத்தம் செய்து, அவற்றின் மீது சிறிது வெண்ணெய் தடவி, வாழைப்பழக் கலவையை இரண்டு இரண்டு ஸ்பூன் வைத்து, ஐஸ்க்ரீம் சிறிது வைத்து கலந்து சாப்பிடவும்.

பிரெட் ஃப்ரூட் ரோல்
தேவையானவை: பிரெட் - 5 ஸ்லைஸ், பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 டீஸ்பூன், நறுக்கிய ஆரஞ்சு, கிவி,  பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம்  தலா - 2 டீஸ் பூன், முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) - 4 டீஸ்பூன், மில்க்மெய்ட் - 5 டீஸ்பூன், தேன்  சிறிதளவு, சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்)  தேவைக்கேற்ப.
செய்முறை: முந்திரி, உலர் திராட்சை மற்றும் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பிரெட் துண்டுகளை ஓரம் வெட்டிக்கொள்ளவும். அதன்மீது மில்க்மெய்ட் ஒரு டீஸ்பூன் தடவி... கொஞ்சம் பழக் கலவை, சிறிது தேன் சேர்த்து பரப்பவும். பிரெட்டை சில்வர் பேப்பர்  மீது வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம்வைத்து எடுத்துப் பரிமாறவும்.

பிளம்ஸ் லஸ்ஸி
தேவையானவை: பிளம்ஸ் பழம்  அரை கப் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்), புளிப்பு இல்லாத கெட்டித் தயிர்  ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 துளி.
செய்முறை: பிளம்ஸ் பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, கெட்டித் தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் ரோஸ் எசென்ஸை கலக்கவும். ஃப்ரிட்ஜில் குளிரவைத்து அருந்தவும்.

ஃப்ரூட் ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி  ஒரு கப், நெய் - 4  டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய்  தலா - 2, பிரியாணி மசாலா  ஒரு டீஸ்பூன், இஞ்சி  பூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், நறுக்கிய பைனாப்பிள், நறுக்கிய ஆப்பிள், திராட்சைப்பழம் (சேர்த்து)  ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை கால் மணி நேரம் ஊறவிட்டு வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து, அதில் நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி  பூண்டு பேஸ்ட், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பழங்களை சேர்த்து, சாதத்தையும் போட்டுக் கிளறி, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கி, பரிமாறவும்.

மூங்கில் அரிசி  ஃப்ரூட் ஊத்தப்பம்
தேவையானவை: மூங்கில் அரிசி ('காதி கிராஃப்ட்’ கடைகள், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  ஒரு கப், பச்சரிசி  ஒரு கப், உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், மாதுளை முத்துக்கள், நறுக்கிய ஆப்பிள், பைனாப்பிள் (சேர்த்து)  அரை கப், எண்ணெய் அல்லது நெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: மூங்கில் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பை ஒன்றுசேர்த்து தண்ணீர் விட்டு 3 மணிநேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவில் பழக் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, மாவை ஊத்தப்பமாக வார்த்து, எண்ணெய் (அ) நெய்விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.

மூங்கில் அரிசி  பழப் புட்டு
தேவையானவை: மூங்கிலரிசியை நீரில் களைந்து, நிழலில் உலத்தி அரைத்த புட்டு மாவு  ஒரு கப், தேங்காய்த் துருவல்   அரை கப், சர்க்கரை  முக்கால் கப், பழத்துண்டுகள் (ஆப்பிள், பைனாப்பிள், செர்ரி)  அரை கப், நெய் - 6 டீஸ்பூன்
செய்முறை: மூங்கில் அரிசி புட்டு மாவை சிறிது வெந்நீர் விட்டு புட்டு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். இட்லித் தட்டுகளில் மாவை போட்டு ஆவியில் வேகவிடவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மாவைப் போட்டு  பழங்கள், சர்க்கரை, நெய், தேங்காய்த் துருவல் கலந்து பரிமாறவும்.

கொய்யாப்பழ கிரேவி
தேவையானவை: கொய்யாப்பழம்  ஒரு கப் (நறுக்கியது), மிளகாய்த்தூள்  ஒன்றரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 6 பல் (தோல் உரிக்கவும்), வெண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் அரை கப் கொய்யாப்பழம், பூண்டு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கொய்யா துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து, அரைத்த கொய்யா கலவையையும் சேர்த்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

வாழைப்பழ ஜாம்
தேவையானவை: வாழைப்பழக் கூழ்  ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், தோல் சீவி, துருவிய இஞ்சி  அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு  அரை டீஸ்பூன், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு கெட்டியான பாத்திரத்தில் நெய் விட்டு, அதில் வாழைப்பழ கூழ், சர்க்கரை, துருவிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து, கலவை கெட்டிப்பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு, தேவைப்படும்போது பிரெட், தோசை, பூரிக்கு தொட்டுச் சாப்பிடலாம்.

Related

எலுமிச்சை 7 பலன்கள்!

எலுமிச்சை 7 பலன்கள் சித்தமருத்துவர், பத்மப்ரியாஉணவுதிருஷ்டி கழிக்கப் பயன்படுத்தப் படும் எலுமிச்சைக்கே திருஷ்டி சுற்றித்தான் போட வேண்டும். அந்த அளவுக்கு எலுமிச்ச...

ஆரோக்கியமான வாழ்வு மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து!

‎ஆரோக்கியமான வாழ்வு மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்...

நலம் ! நலமறிய நாவல்!! கருஊதா நிறத்தில், கண்களைக் கவரும் நாவல் பழம்!!!

நலம் ! நலமறிய நாவல் கருஊதா நிறத்தில், கண்களைக் கவரும் நாவல் பழம், துவர்ப்பும் இனிப்புமாக நாவுக்குச் சுவையை அள்ளித்தரும். ஒருகாலத்தில் தள்ளுவண்டிகளில் விற்றபோது சீண்டுவாரின்றி...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 1:24:22 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,492

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item