சின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்...!
துளிகள்...! சின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்...! கண் பார்வை திறன் அதிகரிக்க...! 7 பாதாம், 2 ஸ்பூன் சீர...
https://pettagum.blogspot.com/2015/01/blog-post_5.html
துளிகள்...!
சின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்...!
கண் பார்வை திறன் அதிகரிக்க...!
7 பாதாம், 2 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கற்கண்டு
ஆகியவற்றைப் பொடிசெய்து பாலில் கலந்து, இரவில் குடித்துவர, பார்வைத் திறன்
அதிகரிக்கும். இதைக் குடித்த பிறகு, வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. ஒரு
கப் இளஞ்சூடான பாலுடன், 1/2 ஸ்பூன் அதிமதுரப் பொடி, 1/4 ஸ்பூன் வெண்ணெய், 1
ஸ்பூன் தேன் கலந்து தினமும் குடித்துவர, கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
இயற்கை பற்பொடி...!
கோதுமை தவிட்டை எரித்து, அதன் சாம்பலோடு, உப்பு,
சர்க்கரை கலந்து பல் தேய்த்தால், பற்கள் பளபளப்புடன் இருக்கும். இதில்
சர்க்கரையின் அளவு உப்பைவிட அதிகமாக இருக்கலாம். வேப்பங்குச்சிப் பொடி,
புதினாப் பொடி, எலுமிச்சைப் பொடி, சர்க்கரை, உப்பு, லவங்கம், ஜாதிபத்திரி
இவற்றைக் கலந்து பல் தேய்த்தால், பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது.
முடி வளர்ச்சிக்கு...!
தேங்காய் எண்ணெய், லாவண்டர் எண்ணெய் 25 துளிகள்,
ரோஸ்மெரி எண்ணெய் 2 துளிகள் கலந்து கூந்தலில் தடவிவந்தால், முடி வளர்ச்சி
அதிகரிக்கும்.
நல்ல கொழுப்பு அதிகரிக்க...!
இரவு, இரண்டு பாதாம்களை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டுவந்தால், நல்ல கொழுப்பு உடலில் அதிகரித்து, இதய நோய் வராமல் காக்கும்.
நகங்கள் அழகாக...!
கடுகு விழுதுடன், வெண்ணெய் சேர்த்து நகங்களில் தடவிவர, நகங்கள் பளபளப்புடன் அழகாக இருக்கும்.
சளித் தொலைக்கு...!
ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,
ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அரை
லிட்டர் நீரில், நறுக்கிய அரை கப் வெண்டைக்காயைப் போட்டு, பாத்திரத்தை
மூடிக் கொதிக்கவிடவும். ஒருநாளைக்கு இருமுறை ஆவி பிடிக்க, சளி குறையும்.
ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ்...!
தக்காளியில் இயற்கையாகவே ஆன்டிசெப்ட்டிக் உள்ளது.
இரவில், தக்காளி விழுதை ப்ளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் இருக்கும் இடத்தில்
தடவி, மறுநாள் கழுவுங்கள். அதுபோல தேனையும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து
கழுவலாம்.
3 comments
நல்ல செய்திகள்...
வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Thanks sir, by pettagum A.S. Mohamed Ali
Post a Comment