தேன்... தேன் தித்திக்கும் தேன்!
தேன்... தேன் தித்திக்கும் தேன்! ''தே வாமிர்தம் எல்லோருக்கும் ருசிக்கக் கிடைக்காது. அதனால்,...
https://pettagum.blogspot.com/2014/12/blog-post_50.html
தேன்... தேன் தித்திக்கும் தேன்! |
''தேவாமிர்தம் எல்லோருக்கும்
ருசிக்கக் கிடைக்காது. அதனால், இயற்கை நமக்குத் தந்த அற்புதமான உணவுப்
பொருள்... தேன். உணவும் அதுவே... மருந்தும் அதுவே!
கார்போஹைட்ரேட்,
கால்சியம், இரும்பு, புரதம், மெக்னீஷியம், வைட்டமின்கள்... எனப் பல்வேறு
சத்துக்களைக்கொண்டது தேன்.
பாப்பா முதல் தாத்தா வரை எல்லோரும் தேனை
உட்கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பருவத்தில் மிகக் குறைந்த அளவே - அதுவும்
அவசியம் ஏற்பட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்குப் பிறகு
ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் தினமும் 10 முதல் 15 மி.லி. தேன்
சாப்பிடலாம். தேன் உண்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள்
கிடைக்கும். சருமம் பொலிவு பெறும். குரல் வளம் பெறும். ரத்தத்தில் உள்ள
ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
உள்ளுக்குள் சாப்பிடுவது, மேற்பூச்சாகப்
பூசிக்கொள்வது என இரண்டு வகைகளிலும் தேனைப் பயன்படுத்தலாம்.
கை கால்களில்
அடிபட்டு வீக்கமாக இருந்தால், பச்சை முருங்கைப் பட்டை அல்லது காய்ந்த
முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்துத் தேனுடன் கலந்து சுடவைத்து,
அடிபட்ட இடத்தில் ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து பற்றுப் போட்டு வந்தால்
குணம் கிடைக்கும்.
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால்,
அந்த இடத்தில் தேனைத் தடவும்போது கடுகடுப்புக் குறையும். பிறகு
மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
எலுமிச்சைச் சாறுடன் சிறிது தேனைக் கலந்து
மூன்று நாட்கள் குடித்துவந்தால், வாய்ப் புண்கள் குணமாகும்.
விதை நீக்கிய
பேரீச்சையைத் தேனில் ஊறவைத்துத் தினமும் சாப்பிட்டு வந்தால், ஆண்மை
அதிகரிக்கும்.
அரிசித் திப்பிலியைப் பொடிசெய்து, தேனில்
கலந்து, காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் அளவு மூன்று நாட்களுக்குச்
சாப்பிட, வறட்டு இருமல் குணமாகும்.
நாவல் பழக் கொட்டையை நன்றாகக் காயவைத்துப் பொடி
செய்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, சர்க்கரை நோய் உள்ளவர்கள்
ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மதியச் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம்
முன்பாகச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படி 48 நாட்களுக்குச் சாப்பிட்டுவர,
இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் சரியான ருசி
உணர்வு தெரியாது. ஜாதிக்காய், மாசிக்காய் ஆகியவற்றைத் தூள் செய்து, தேனில்
ஒருநாள் முழுவதும் ஊறவைத்துத் தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட, நாவில் உள்ள
சுவை நரம்புகள் தூண்டப்பட்டு நன்றாகச் சுவையை உணர முடியும்.
சிறிதளவு கருந்துளசியையும் மிளகையும் இடித்து
இரண்டு மணி நேரம் தேனில் ஊறவைக்கவும். இதில், ஒரு டீஸ்பூன் அளவுக்குத்
தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர, சளியினால் வரும் ஜுரம் சரியாகும்.
தோல் நீக்கிய பாதாமைத் தேனில் ஊறவைத்துத் தினமும் சாப்பிட்டுவந்தால், உடல்
சோர்வு, அசதி நீங்கிச் சுறுசுறுப்பு உண்டாகும்.
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன்
தேன் கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வர, ஆஸ்துமா, சளி,
மூச்சிரைப்பு குணப்படும்.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள்
வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால், நிம்மதியான உறக்கம்
கிடைக்கும்.
பொதுவாக, சூட்டை அதிகப்படுத்தும் என்பதால், உடல் சூடு அதிகமாக
இருப்பவர்கள் எப்போதாவது மட்டுமே தேன் சாப்பிட வேண்டும்.
தேன், முடியின்
மீது பட்டால் நரைத்துவிடும் என்பார்கள். அது தவறான கருத்து. முடியின் மீது
தேன் படும்போது, முடியில் உள்ள மெலனின் நிறமியின் அளவு சற்றுக் குறைந்து
லேசாக செம்பட்டை நிறத்தில் தோன்றும். ஆனால், வெளியில் செல்லும்போது சூரிய
ஒளியில் உள்ள 'வைட்டமின் டி’ முடியின் மீது படுவதால், இரண்டு நாட்களிலேயே
கேசம் இயல்பான கருப்பு நிறத்துக்கு மாறிவிடும்.
அதேபோல வெந்நீரில் தேன்
கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடல் இளைக்கும்
என்பார்கள். இப்படிச் சாப்பிடுவதால், உடலில் உள்ள தேவையற்றக் கழிவுகள்
வெளியேற்றப்படும்.
ஓரளவு உடல் எடை குறையும் வாய்ப்பும் உண்டு. வெந்நீரில்
தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் இன்னும் கூடுதல் பலன்
கிடைக்கும்.
ஆனால், ஒன்று முக்கியம்... நீங்கள் பயன்படுத்தும் தேன்
சுத்தமானதாக இருந்தால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்!''
ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி, ஒரு கரண்டியில் தேனை எடுத்து
சிறிது சிறிதாக ஊற்றினால், நல்ல தேன் கம்பிபோல் நீரில் இறங்கும். சர்க்கரை
பாகு கலப்படம் செய்யபட்டிருந்தால் அது நீரில் கரையும்.
சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய
தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப்பெட்டியில் பற்ற வைக்க வேண்டும்.
குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய
வேண்டும்.
மை உறிஞ்சும் காகிதத்தில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது.
தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான
பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு
காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த
உதவுகின்றது.
தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.
சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு
தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் இஞ்சிச்சாறு ரெடி. இது நெஞ்செரிச்சல்,
மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வாகு சீராகும்.
அடிக்கடி சளி பிடித்தால், இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேனை கலந்து தினமும் பருக வேண்டும், நல்ல பலன் தெரியும்
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில்
காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து
தேனீக்கள் தேனை பெறுகின்றன.
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து
அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி
அடையும்.
2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக்
கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித்
தொல்லை குறையும்.
6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில்
தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும்
நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச்
சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான
தேனாக இருக்கவேண்டும்.
17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை
எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும்
சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத
இடத்திற்கு ஓடிவிடும்.
குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும்
எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள்
நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள்
சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன்
வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்
என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த
வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர
வேண்டும்.
|
Post a Comment