2006-ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறேன். தற்போது ஒரு மாத விடுமுறையில் இந்தியாவுக்கு வர உள்ளேன். இந்தச் சமயத்தில் நான் ஏதா...
2006-ம்
ஆண்டு முதல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறேன். தற்போது ஒரு மாத
விடுமுறையில் இந்தியாவுக்கு வர உள்ளேன். இந்தச் சமயத்தில் நான் ஏதாவது
வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டுமா? என் சம்பளம் தவிர்த்து வேறு எந்த
வருமானமும் எனக்கு இல்லை. வரித் தாக்கல் செய்ய வேண்டுமெனில் என்ன செய்ய
வேண்டும்?, மேலும், 2006-ம் ஆண்டு முதல் இந்தியாவில் எந்த வரியும்
செலுத்தவில்லை. இது தவறா?
“வெளிநாடுகளில் வாழும் இந்தியர் இந்தியாவில் ஒரு
வருடத்துக்கு 182 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர் இந்தியராக கருதப்பட்டு
வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த 182 நாட்கள் என்பது விமானத்தைவிட்டு
இந்தியாவில் இறங்கி மீண்டும் விமானத்தில் ஏறும் வரை கணக்கிடப்படும்.
இதன்படி அரைமணி நேரம் கூடுதலாக இருந்தால் கூட சிக்கல்தான். நீங்கள் ஏழு
வருடமாக வெளிநாடுகளில் தொடர்ந்து தங்கியிருந்துவிட்டு, தற்போது ஒருமாதம்
மட்டும்தான் இந்தியாவில் தங்கி இருக்கிறீர்கள் எனில் வருமான வரி செலுத்த
தேவையில்லை.”
Post a Comment