முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? உபயோகமான தகவல்கள்!

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீடு எ...

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீடு திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

தகுதிகள்:
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில் தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.

எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிருநாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படிப் பெறுவது?
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்கண்ட சிகிச்சைகளப் பெற முடியும்.
  • இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச்சிகிச்சை/cardiology and cardiothoracic Surgery
  • புற்று நோய் மருத்துவம் /Oncology
  • சிறுநீரக நோய்கள் /Nephrology/urology
  • மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery
  • கண் நோய் சிகிச்சை/opthalmology
  • இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology
  • ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள் /Plastic Surgery
  • காது,மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T
  • கருப்பை நோய்கள்/Gynaecology
  • இரத்த நோய்கள் / Haematology
மருத்துவமனை செல்லும் போது கவனிக்க வேண்டியவை:
  • சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல்நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.
  • இலவச சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவம்னையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சைக்கே வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.
ஆன்லைனில் தெரிந்துகொள்ள:
உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும். https://docs.google.com/file/d/1VpMQHGnbQywYPlAxYoW8AFec27t6s6sUNMj
AIJdGJUtzluRhC2G9KqJl5aMS/edit


கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும்.
 https://docs.google.com/file/d/1oiaOxsjjbSfT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGlYX9l
EUJH5Do8cP9JL6WL4J/edit


உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.
https://docs.google.com/file/d/1yOaTDA5h-NrGk_-uJazqLgFkXvViHqJmZaFKeRn9v8mm9ZTsrEKq UNPVCCwv/edit

மேலதிக விவரங்களுக்கு:
  • இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
  • http://www.cmchistn.com/ இத்தளத்திற்கு செல்லலாம்.
  • 1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related

உபயோகமான தகவல்கள் 2993453732665369735

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item