கணினி... கொஞ்சம் கவனி!
உங்கள் பாஸ்வேர்டு பத்திரமா?
இ-மெயில்களின்
வரவுக்குப் பின்தான், இரண்டு பேருக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களின்
காலம் குறைந்துள்ளது, பிரைவஸி அதிகரித்துள்ளது என அதன் ப்ளஸ் பாயின்ட்டுகளை
மெச்சும் காலம் இல்லை இது. காரணம், உங்களுக்கு மட்டுமே தெரியும் என்று
நினைக்கும் உங்களது பாஸ்வேர்டு மற்றவர்களாலும் எளிதில் திருடப்படக்கூடியதாக
உள்ளதால், நீங்கள் சந்திக்க நேரும் ஆபத்துகள் பல.
என்ன ஆபத்துகள்?
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பயன்படுத்தும்
கணினி, நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அதுவும்
பாதுகாப்பில்லாததுதான். இன்டர் நெட்டில் தோன்றும் விளம்பரங்கள் சில பிரபல
இ-மெயில் தளங்களைப் போன்றும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் போன்றும்
வடிவமைக்கப்பட்டிருக்கும் (ஃபிஷிங்). ஒரிஜினல் எது, டூப்ளிகேட் எது என்பதை
அறியமால் 'லாக் ஆன்' ஆகிவிட்டால், உங்கள் தகவல்கள் திருடப்பட்டு வேறு ஓர்
இடத்தில் பதிவு செய்யப்படும். மேலும் உங்கள் இமெயிலின் பாஸ்வேர்டு
தெரிந்துவிட்டால் போதும்... உங்கள் பர்சனல் விஷயங்கள் அனைத்தும்
திருடப்பட்டுவிடும்.
அடுத்ததாக, பெர்சனல் கணினி இன்றி, நீங்கள்
அவசரத்துக்காக அருகில் உள்ள ஒரு பிரவுஸிங் சென்டருக்குச் சென்று,
அலுவலகத்துக்கு ஒரு மெயில் அனுப்ப நேரிடலாம். அல்லது சமூக வலைதளம் வாயிலாக
உங்கள் நண்பர், உறவினருக்கு செய்தி அனுப்பலாம். அப்போதுதான் அதிக பாதிப்பு
ஏற்படுகிறது. 'ஸ்கிரீன் கேப்ச்சரிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,
நீங்கள் கணினி திரையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல்
கண்காணிக்கலாம். அல்லது உங்கள் கணினியின் உள்ளமைப்பில் பதிவாகும்
'ஹிஸ்டரி’யில் பதிவாகி இருக்கும் உங்களது சமீபத்திய இணையதள பார்வைகள் மூலம்
கூட புரோகிராமை மாற்றி எழுதி, உங்கள் பாஸ்வேர்டை பெற முடியும்.
அடுத்த ஆபத்து நேரும் வழி இது. உங்கள் மின்னஞ்சல்களில்
சில சமயம் இதுபோன்ற ஒரு செய்தி இடம் பெறலாம். 'உங்கள் பாதுகாப்புக்காக
உங்கள் கணக்கை நாங்கள் மேம்படுத்துகிறோம். அதற்கு உங்கள் பாஸ்வேர்டு
மற்றும் பாஸ்வேர்டு புதுப்பிக்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்’ என்று
கேட்கும். அப்போது நீங்களும் நம்பி அளித்தால், சில நேரங்களில் அது
ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கும். அப்போது அவர்கள் திருட நினைத்ததை
நீங்களே தானாக முன்வந்து கொடுத்தது போல் ஆகிவிடும்.
தப்புவது எப்படி?
அலுவலக அல்லது வீட்டு கணினிகளை பயன்படுத்தும்போதும், நீங்கள் செல்ல
வேண்டிய இமெயில் தளத்தையோ அல்லது ஷாப்பிங் இணையதளங்களையோ நீங்களே டைப்
செய்து உள்நுழைவது சிறந்தது.
பிரவுஸிங்
சென்டரில் லாக் இன் செய்யும்போது, அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு,
'ஹிஸ்டரி’ பதிவுகளை அழிக்கத் தவறாதீர்கள். அதோடு பிரவுஸர் அமைப்பில் உள்ள
குக்கீஸ் பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டே அங்கிருந்து செல்லுங்கள்.
பிரவுஸிங்
சென்டரில் கணினி பயன்படுத்தும் போது, நீங்கள் மவுஸை நகர்த்தாமல் கர்ஸர்
எங்காவது நகர்கிறதா என்று கவனியுங்கள். அப்படி இருந்தால் உடனே அந்த கணினி
மையத்தில் பிரவுஸிங் செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில், அந்த மையம் உங்களை
ஸ்கிரீன் கேப்சரிங் அல்லது ஸ்கிரீன் வியூவர் மூலம் கண்காணிக்கிறது என்று
அர்த்தம்.
உங்கள்
செல்போனில் இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை இணைத்து வைத்திருந்தால்
அதனை யாரிடமும் பகிராதீர்கள். இன்று பெரும்பாலான போன்களில் உள்ள 'ஷோ
பாஸ்வேர்டு’ ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக எடுக்கலாம்
என்பதால், அதில் கவனமாக இருங்கள்.
உங்களுக்கு உதவும் 'அசிஸ்டென்ட்’!
அன்றாடம் நிறைய
வேலைகள் உள்ளவரா நீங்களா? உங்களுக்கு யாராவது ஒருவர் உதவிக்கு இருந்தால்
நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்காகவே வந்திருக்கிறது ஒரு
ஆப்ஸ். இந்த ஆப்ஸ் உங்களது அன்றாட வேலைகளை நினைவு வைத்து, நீங்கள் இன்று
சந்திக்க இருக்கும் நபர்களை உங்களுக்கு சரியான நேரத்தில் நினைவுபடுத்துவது
மட்டுமல்லாமல், குரல் வழியாகவும் நினைவூட்டுகிறது. இதனால் உங்களது முக்கிய
சந்திப்புகளை மறந்தாலோ, அல்லது அவசரத்தில் மதிய உணவை சாப்பிட மறந்தாலோ இந்த
ஆப்ஸ் உங்களுக்கு ஞாபகப்படுத்திவிடும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக
கிடைக்கும் இந்த ஆப்ஸ், சிறந்த ஆப்ஸுக்கான பல விருதுகளை குவித்துள்ளது.
5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ள இந்த ஆப்ஸ் 5 கோடி டவுன்லோடுகளை
தாண்டியுள்ளது.
நீங்களும் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்ய:
Post a Comment