ஆரோக்கியத்துக்கு ரூட்... பீட்ரூட்! காய்கறிகளின் மருத்துவ குணங்கள்!!
ஆரோக்கியத்துக்கு ரூட்... பீட்ரூட்! ''' பீ ட்ரூட் சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தைகளுக்கு சொல...

https://pettagum.blogspot.com/2014/11/blog-post_41.html
ஆரோக்கியத்துக்கு ரூட்... பீட்ரூட்!
'''பீட்ரூட்
சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தைகளுக்கு
சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, உடலில்
புதிய ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரிகிறது. அந்தக் காலத்தில்
ரோமானியர்கள் காய்ச்சல், மலச்சிக்கல், புண், தோல் பிரச்னைகள் ஆகியவற்றைச்
சரிப்படுத்த, பீட்ரூட்டைப் பயன்படுத்தினர். ரத்த அழுத்தத்தைக் குறைப்பது,
வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்டது
பீட்ரூட்
பீட்ரூட்டின் மருத்துவப் பலன்கள் பற்றி புதுச்சேரியைச்
சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ஸ்ரீதர் சொல்கிறார்... 'பச்சைக் காய்கறிகள்,
கீரைகள், பழங்கள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை அதிக அளவு
சாப்பிட்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில்,
பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே போதும். நல்ல பலன்
கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு,
சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில்
அடங்கியுள்ளன. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்ல
பலனைத் தரும். பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.
ஆனால், குழந்தைகள் அதன் நிறத்துக்காகவே விரும்பிச் சாப்பிடுவார்கள்'
என்றவர், பீட்ரூட்டின் பலன்களைப் பட்டியலிட்டார்...
Post a Comment