குண்டு பூசணியா நீங்கள்?இஞ்சி சாறும், பப்பாளி காயும்இருக்கையில் எதற்கு அச்சம்! உணவே மருந்து!!
குண்டு பூசணியா நீங்கள்?இஞ்சி சாறும், பப்பாளி காயும்இருக்கையில் எதற்கு அச்சம்! இன்றைய சூழலில், உடல் பருமன் ஒரு வகையான வியாதி. ...
இன்றைய சூழலில், உடல் பருமன் ஒரு வகையான வியாதி. அதுமட்டுமல்ல, எல்லா வகையான
வியாதிகளுக்கும், அதுவே வாசல். நாள்தோறும் வளர்ந்து வரும் மருத்துவ விழிப்புணர்வு காரணமாக, உடல் எடையை குறைக்க, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முயற்சி அல்லது பயற்சியில் ஈடுபடுகிறோம்.
டயட்டீசியன்கள் கொடுக்கும், 'டயட் லிஸ்ட்'ஐ கையில் வைத்து கொண்டு சிலர், கிச்சனுக்கும், டைனிங் ஹாலுக்குமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் பலர், எந்த பயிற்சியும் செய்யாமல், 'டிவி' விளம்பரங்களில் வரும், பவுடர், மாத்திரையை நம்பி தோற்றுப் போகின்றனர்.
அதற்குப் பதிலாக, இயற்கை நமக்கு அளித்துள்ள, உணவு முறையை பின்பற்றினாலே போதும் என்கின்றனர், மருத்துவர்கள்.
அவர்கள் தரும் 'டிப்ஸ்' இது தான்:
சாதம், இட்லி, தோசை அயிட்டங்களை தவிர்த்து, தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பழத்தை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அவற்றை உண்ணலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
இரவில் உணவுக்கு பின், துாங்க செல்வதற்கு முன், பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். உணவில் தேங்காய் பயன்பாட்டை அறவே குறைக்க வேண்டும்.
பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை அதிகளவு சேர்த்துக் கொள்வதும் நல்லது.
இஞ்சியை இடித்து சாறு எடுத்து, அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். சாறு சற்று சுண்டியதும், தேன் விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால்,
40 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாது.
வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு; மூன்றில், ஏதாவது ஒன்றை தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
இதற்கிடையில், தினமும் காலையில் அல்லது மாலையில் அல்லது இரு வேளைகளிலும், அரை மணி நேரம் நடந்தால் போதும். அப்புறம் யாரும் உங்களை 'குண்டு பூசணி' என்று சொல்ல முடியாது.
Post a Comment