ஞாயிறைப் போற்றுவோம்!உடற்பயிற்சி!!
சூரிய நமஸ்காரம் என்பது வடமொழி வார்த்தையாக இருக்கலாம். ஆனால் சூரியனை வணங்குவதும் போற்றுவதும் காலங்காலமாக நிலவி வந்த நம் தமிழ் மரபுதான்...

https://pettagum.blogspot.com/2014/08/blog-post_38.html
சூரிய நமஸ்காரம் என்பது வடமொழி வார்த்தையாக இருக்கலாம்.
ஆனால் சூரியனை வணங்குவதும் போற்றுவதும் காலங்காலமாக நிலவி வந்த நம் தமிழ்
மரபுதான். 'ஞாயிறு போற்றுதும்’ என்கிறது சிலப்பதிகாரம். பொங்கல்
கொண்டாடுவதே சூரியனுக்கு நன்றி சொல்லத்தானே!
காலையில் சுமார் ஐந்தரை மணி அளவில் வெறும் வயிற்றில்
சூரியனைப் பார்த்து, மூச்சோடும் மந்திரத்தோடும் சூர்ய வணக்கத்தை செய்யும்
எவரும் பெரும் பலன் அடைய முடியும். சூரிய வணக்கத்தில் சில ஆசனங்கள் உள்ளன.
இதை புதியதாக செய்பவர்கள், உடல் இறுக்கம் கொண்டவர்கள், ஏதாவது உடல்
பிரச்னைக் கொண்டவர்கள் எடுத்த எடுப்பில் செய்ய இயலாமல் போகலாம். அவர்கள்
தங்களை தயார் செய்துகொண்டு பின் பயிற்சி செய்வது நல்லது. கடுமையாகப்
போராடி, உடலை வருத்திக்செய்வது சரியான பயிற்சி அல்ல.
இந்தியாவில் சூரிய நமஸ்காரம், பல வகைகளில், சிறு சிறு
வித்தியாசங்களுடன் செய்யப்படுகின்றன. சூரிய நமஸ்காரத்தின் ஒவ்வொரு நிலையும்
ஒரு குறிப்பிட்ட பலனைத் தரும். ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட ஒரு
மந்திரத்தை ஒலிக்க வேண்டும். மந்திரம் என்று சொல்லப்படும் இந்த ஒலியை
மீண்டும் மீண்டும் எழுப்பும்போது மனதை ஒருநிலைப்படுத்தல் அதிகரிக்கும்.
அசைவு, மூச்சு, மந்திர ஒலி மூன்றும் ஒரே நேரத்தில்
ஒருங்கிணைத்துச் செய்வது தொடக்கத்தில் கடினமாக இருக்கலாம். அதனால்
மெதுவாகவும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுக்களையும் ஆரம்பப்
பயிற்சியாகக்கொள்ள வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற பிறகு மெள்ள மெள்ள
சுற்றுக்களைக் கூட்டலாம். மூன்று, ஆறு, 12 என்று மெள்ள மெள்ள எண்ணிக்கையை
அதிகரிக்கலாம். அதிக பட்சமாக 108 சுற்றுக்கள் வரை சூரியநமஸ்காரம்
செய்யலாம்.
Post a Comment