ஈஸியா செய்யலாம் யோகா ! சாந்தி ஆசனம் அல்லது சவாசனம்!
ஈஸியா செய்யலாம் யோகா ! சாந்தி ஆசனம் அல்லது சவாசனம்! ஆசனங்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த ச...

https://pettagum.blogspot.com/2014/08/blog-post_28.html
ஈஸியா செய்யலாம் யோகா !
சாந்தி ஆசனம் அல்லது சவாசனம்!
ஆசனங்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த சாந்தி ஆசனம்.
நீங்கள் யோகாசனம் செய்யும்போது, இடையிடையே இந்த சாந்தி ஆசனத்தில் சற்று
நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு அடுத்த ஆசனத்தைத் தொடரலாம்.
செய்முறை:
ஒரு விரிப்பின் மீது அமர்ந்து, இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து, பிறகு மல்லாந்து படுக்கவும்.
ஆங்கில எழுத்து 'வி’ வடிவில் கால்களை விரித்து, தளர்வாக்கவும்.
கைகளையும் உடம்பின் இரு பக்கவாட்டுகளில் விரித்துத் தளர்த்திக்கொள்ளவும்.
கண்களை மூடி, சீராக மூச்சு விட வேண்டும். மூச்சு, இயல்பாக இருக்கட்டும்.
அப்படியே சில நிமிடங்கள் படுத்திருக்கவும்.
பிறகு, கால்களைச் சேர்த்து, கைகளையும் உடலோடு சேர்க்கவும்.
மீண்டும், இடதுபுறம் திரும்பி, ஒருக்களித்துப் படுக்கவும்.
இடது கையைத் தலைக்கு மேலே நீட்டி, வலது கையை முன்புறம் வைத்து ஊன்றி, எழ வேண்டும்.
குறிப்பு: மல்லாந்து படுத்தபடி எழுந்திருக்கக் கூடாது.
எப்போதுமே இடதுபுறம் திரும்பிப் படுத்து, இடதுபுறமாகத்தான் எழுந்திருக்க
வேண்டும்.
பலன்கள்:
ªஇந்த ஆசனத்தில் இருக்கும்போது, நம் உச்சந்தலையில்
இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளை ஓய்வுபெறும்.
மனம் அமைதியாக இருக்கும்.
ªஓடி விளையாடும் இந்த வயதில், உடலையும் மனதையும்
ரிலாக்ஸ் செய்ய, சாந்தி ஆசனம் அவசியம். 10 நிமிடங்கள் உடலை அசைக்காமல்
சாந்தி ஆசனம் செய்வது, 30 நிமிடங்கள் யோகாசனம் செய்வதற்குச் சமம்.
1 comment
http://tradilife.com/
Post a Comment