சமையல் அறை---சமையல் குறிப்புகள்! சமையல் அரிச்சுவடி!!
சமையல் அறையில்… சமையல் அறை ---சமையல் குறிப்புகள் உப்புமா அல்லது கேசரி செய்ய ரவையை வறுக்கும் போது அதில் இரண்டு ...
சமையல் அறையில்…
சாதாரணமாக பஜ்ஜி போடும்போது கடலைமாவு, அரிசி மாவு இரண்டும்தான் கலந்து போடுவோம். அதோடு மிகக் கொஞ்சமாக மைதா மாவு கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.
குழம்பில் புளி அதிகமாகி விட்டால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்புச் சுவை உடனே சரியாகிவிடும்.
சாம்பார் கமகம என்று மணக்க வேண்டும் என்றால் கொதிவரும் சமயத்தில் கொஞ்சம் வெங்காயத்தை பேஸ்ட் பண்ணி போட்டால் போதும்.
உளுந்துவடை செய்யும்போது மாவில் சிறிது தயிர் ஊற்றினால் அதிக எண்ணெய் குடிக்காமல் மிருதுவான வடை கிடைக்கும்.
வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை எளிதில் உரிக்க, வேக வைத்த உடன் குளிர்நீரில் போட்டுவிட வேண்டும்.
Post a Comment