''எங்கள் கறவை மாட்டின் மடியில் உண்ணிகள் அட்டைப் போல ஒட்டிக் கொள்கின்றன. அதை அகற்றினால், அந்த இடத்திலிருந்து ரத்தம் வருகிறது. ஆங்...
''எங்கள் கறவை மாட்டின்
மடியில் உண்ணிகள் அட்டைப் போல ஒட்டிக் கொள்கின்றன. அதை அகற்றினால், அந்த
இடத்திலிருந்து ரத்தம் வருகிறது. ஆங்கில மருந்துகளால் பெரிதாக பலன் இல்லை.
இயற்கை மருத்துவத்தில் தீர்வு கிடைக்குமா?''
ஐ.எஸ். சுந்தரமூர்த்தி, ஐவதுகுடி.
தஞ்சாவூரில்
உள்ள மரபுசார் மூலிகை வழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். புண்ணியமூர்த்தி.
''நிச்சயம், நமது பாரமபரிய மூலிகை மருத்துவத்தில்
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டு. தும்பை, துளசி, திருநீற்றுப்பச்சிலை,
குப்பைமேனி ஆகியவற்றை தலா, ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும். இத்துடன்,
ஓமவல்லி இலைகள் 4, பூண்டு 1 பல், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், கற்பூரம் 1 வில்லை
ஆகியவற்றை அம்மியில் வைத்து, மையாக அரைக்கவும்.
இந்தக் கலவையில் தேங்காய்
எண்ணெய் அல்லது வெண்ணெய் 100 மில்லி கலந்து எடுத்துக் கொள்ளவும். பால்
கறந்த நேரம் போக, மற்ற நேரங்களில் இந்த மருந்தை மடியில் தடவி வரவும்.
மூன்று நாட்களுக்கு இப்படிச் செய்தால், உண்ணிகள் மடிப்பக்கம் எட்டிப்
பார்க்காது.
மருந்து தடவும் முன்பு, மடியில் உள்ள உண்ணிகளை அகற்ற, தேங்காய்
நாரை தண்ணீரில் நனைத்துத் தேய்க்கவும். இதனால், உண்ணிகள் எளிதாக
வந்துவிடும். தேங்காய் நார் கொண்டு தேய்ப்பதால், மடியில் புண் வரலாம்.
அதற்காக பயப்பட வேண்டாம், நாம் தடவும் மருந்துகள் புண்ணை ஆற்றிவிடும்.''
தொடர்புக்கு, மரபுசார் மூலிகை வழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.
தொலைபேசி: 04362-204009
செல்போன்: 98424-55833
Post a Comment