வீட்டிலேயே மசாலா பால் தயாரிக்க முடியுமா? எப்படி?’’ சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில்!
‘‘நாங்கள் குடும்பத்தோடு வெளியே போகும்போதெல்லாம் மசாலா ...
https://pettagum.blogspot.com/2014/05/blog-post_8643.html
‘‘நாங்கள்
குடும்பத்தோடு வெளியே போகும்போதெல்லாம் மசாலா
பால் அருந்தும் வழக்கமுண்டு. அதன் டேஸ்ட்டும் மணமும்
எங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால்,
வீட்டில் செய்து பார்த்தபோது, அப்படி வரவில்லை.
வீட்டிலேயே மசாலா பால் தயாரிக்க முடியுமா? எப்படி?’’
‘‘வீ ட்டிலேயே
மசாலா பால் தயாரிப்பது பெரிய விஷயமே இல்லை.
மிக எளிய முறையில் தயாரிக்கலாம்.
2 கப் பாலை, 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்
காய்ச்சுங்கள். சர்க்கரையை உங்கள் விருப்பப்படி கூட்டியோ,
குறைத்தோ போட்டுக் கொள்ளலாம். தீயைக் குறைத்துவைத்து,
நிதானமான தீயில் காய்ச்சவேண்டும். 4 பாதாம்பருப்புகளை
எடுத்து, கொதிக்கும் நீரில் போட்டெடுத்து, தோலைத்
தேய்த்தால், தோல் நீங்கிவிடும். அதோடு 4 முந்திரிப்பருப்புகளைச்
சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதையும்
பாலோடு சேர்த்து காய்ச்சுங்கள். பால் சற்றுக் குறுகியதும்,
அரை டீஸ்பூன் ஏலக்காய்தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ
போட்டுக் கலக்கி, இறக்குங்கள். இன்னும் கொஞ்சம்
பாதாம்பருப்புகளை (7 அல்லது 8) தோல் நீக்கி,
பொடியாக நறுக்கி, பாலின் மேல் தூவி, சூடாகவோ,
குளிரவைத்தோ பரிமாறுங்கள். பாதாம், முந்திரி, குங்குமப்பூ
வாசத்தோடு, சூப்பர் டேஸ்ட்டி மசாலா பால் உங்கள்)
வீட்டிலேயே தயார் ஆயிடுச்சு, பாருங்க!’’
Post a Comment