வீட்டு கண்ணாடியை சுத்தப்படுத்த டிப்ஸ் !! வீட்டுக்குறிப்புக்கள்!
வீட்டின் உள் அலங்காரத்தில் கண்ணாடிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அலமாரிகளின் கதவுகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஜன்னல்கள் என பல்வே...
வீட்டின் உள் அலங்காரத்தில் கண்ணாடிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அலமாரிகளின் கதவுகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஜன்னல்கள் என பல்வேறு இடங்களிலும் கண்ணாடிகளின் பயன்பாடே அதிகமாக உள்ளது.
எவ்வளவுதான் கலை நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்ட மரங்களை வைத்து நாம் வடிவமைத்திருந்தாலும் , வீட்டின் குறிப்பிட்ட சில இடங்களில் கண்ணாடிகளை கொண்டு அலங்கரிப்பதால் கிடைக்கும் அழகு வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது.
அதே போன்று வீட்டின் உள் அலங்காரங்களில் கண்ணாடியை பயன்படுத்த வேண்டும் என்று ஆர்வம் காட்டும் பலர் , அதனை சரிவர பராமரிப்பதில்லை. கண்ணாடி பராமரிப்பிற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பலரிடமும் இல்லாததே இதற்கு காரணமாகக் கருதப்படுக்றது.
அனைவரும் கண்ணாடியை சுத்தம் செய்வது என்பது மிகவும் எளிது என்று நினைக்கின்றனர். உண்மையில், அது தான் தவறு. என்ன தான் வெறும் தண்ணீரைக் கொண்டு, கண்ணாடியை துடைத்தாலும், அதிலிருக்கும் கறைகளானது முற்றிலும் போகாமல் இருக்கும். எனவே கண்ணாடியில் படிந்திருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு, ஒருசில பொருட்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் முகம் பார்க்கும் கண்ணாடியானது பளிச்சென்று மின்னும்.
இத்தகையோரின் தேவைகளை கருத்தில் கொண்டு உலா அலங்கார நிபுணர்கள் கூறும் சில ஆலோசனைகள்
ஈரமான துணியைக் கொண்டு கண்ணாடியை துடைத்து விட்டு, காய்ந்த சுத்தமான துணியைக் கொண்டு துடைப்பதற்கு பதிலாக, செய்தித்தாள்களைப் பயன்படுத்தலாம். இதனால் கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு, தண்ணீர் கறைகளும் அகலும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து கலந்து, கண்ணாடியின் மீது தெளித்து, பேப்பர் கொண்டு துடைத்தால் உங்கள் வீட்டுக் கண்ணாடிகள் மின்னும்
முகத்திற்கு மட்டுமல்ல உங்கள் வீட்டுக் கண்ணடிகளுக்கும் எலுமிச்சை சிறந்தது, எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, கண்ணாடியில் தெளித்து காகிதம் கொண்டு துடைத்தால் கண்ணாடிகள் பளிச்சென்று மின்னுவதோடு நல்ல நறுமணமும் வீசும்.
ஆல்கஹாலை நீரில் கலந்து, கறை உள்ள கண்ணாடியின் மீது தெளித்து, சுத்தமான பேப்பரால் துடைத்தால், கறைகள் நீங்கிவிடும்.
கண்ணாடியை சுத்தப்படுத்த மற்றொரு முறை, போராக்ஸ் பொடியை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கண்ணாடியில் தெளித்து துடைக்க வேண்டும்.
கண்ணாடியை சுத்தப்படுத்த மென்மையான காட்டன் துணியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடியில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.
Post a Comment