தேங்காய் பால் சூப்! உடலுக்கு வலிவு தரும் சூப்கள்!!
...
தேங்காய் பால் – 1 கப்
பசும்பால் – 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் – 5
இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை பழம் – பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோள மாவு – 2 ஸ்பூன்
செய்முறை:-
• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
• தேங்காயை துருவி அதை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
• அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
• நன்கு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.
• நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும். பருகும் போது மிளகு தூள் சேர்க்கவும்.
• சுவையான(பசியை தூண்டகூடிய)ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் தயார்.
Post a Comment