சீரக குழம்பு! சமையல் குறிப்புகள்-சைவம்!
தேவையான பொருட்கள்: 1. கடுகு - 1/4 தேக்கரண்டி 2. சீரகம் - 4 தேக்கரண்டி 3. பூண்டு - 10 பல் 4. உளுந்து - 1/4 தேக்கரண்டி ...
https://pettagum.blogspot.com/2014/02/blog-post_5239.html
- 1. கடுகு - 1/4 தேக்கரண்டி
- 2. சீரகம் - 4 தேக்கரண்டி
- 3. பூண்டு - 10 பல்
- 4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
- 5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
- 6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- 7. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- 8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
- 9. உப்பு - தேவைக்கு
- 10. வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
- 11. தக்காளி - 1 (நறுக்கியது)
- 12. கருவேப்பிலை
- 13. கொத்தமல்லி
- 14. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
- 15. புளி கரைசல் - 1/4 கப்
செய்முறை:
- எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
- பின் சீரகம் சேர்த்து லேசாக வதக்கவும்.
- இதில் நறுக்கிய வெங்காயம், உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
- சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
- இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்(அதிகம் சேர்க்க வேண்டாம், குழம்பு தண்ணியாக இருக்கும்).
- தூள் வாசம் போக கொதித்ததும், புளி கரைசல் சேர்த்து குழம்பு பதத்தில் எண்ணெய் திரண்டு வரும்போது இரக்கி விடவும்.
Post a Comment