ஜவ்வரிசி கிச்சடி--சமையல் குறிப்புகள்-சைவம்!
...

ஜவ்வரிசி – ஒரு கப்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
வேர்க்கடலை – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
• ப.மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வேர்க்கடலையை ஒன்றும் பாதியாக உடைத்துக் கொள்ளவும்.
• ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசிறி ஊற வைக்கவும். (கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்).
• கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
• அதன் பின் பெருங்காயத்தூள் இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும்.
• பொன்னிறம் ஆனதும் பிசிறி வைத்துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
• ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறி நல்ல மணம் வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
Post a Comment