கவிதைத்துளிகள்!
புரிந்து கொள்வாயா? நீ நினைத்திருக்க மாட்டாய்...உன்னையே நான் நினைக்கிறேன் என்று! நீ கண்டிருக்க மாட்டாய்...உன்னை நான் அணு...

https://pettagum.blogspot.com/2014/02/blog-post_12.html
நீ
நினைத்திருக்க மாட்டாய்...உன்னையே
நான் நினைக்கிறேன் என்று!நினைத்திருக்க மாட்டாய்...உன்னையே
நீ
கண்டிருக்க மாட்டாய்...உன்னை நான்
அணு அணுவாய் ரசிக்கிறேன் என்று!
நீ
யோசித்திருக்க மாட்டாய்...உன்னைப் பற்றி
யோசிப்பதே என் வேலை என்று!
நீ
தெரிந்திருக்க மாட்டாய்...உன் தேவைகள்
அனைத்தும் எனக்குத் தெரியும் என்று!
நீ
சிந்தித்திருக்க மாட்டாய்...உன்னைப் பற்றிய
சிந்தனைகளே என் சுவாசம் என்று!
நீ
அறிந்திருக்க மாட்டாய்...என்னிடம்
உன் எதிர்காலத்தை ஒப்படைக்கிறாய் என்று!
நீ
எண்ணியிருக்க மாட்டாய்...என் எண்ணங்களே
உன்னை உருகுலைய செய்கிறது என்று!
நீ
உணர்ந்திருக்க மாட்டாய்... உன் உயிருடன், உணர்வுடன்
உரிமை கொள்கிறேன் என்று!
அனைத்தும் நீ அறிகையில் என்னை அள்ளி அணைப்பாயா?
இல்லை...அறிவீலி என நீ நினைப்பாயா?
எதுவாகிலும் என் காதல் மாறாது...உன் நினைவுகள்
என்னை விட்டு அகலாது...புரிந்து கொள்வாயா
என் அன்பே!
Post a Comment