தொப்பை குறைய எளிய பயிற்சி! உடற்பயிற்சி!!
...
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_6055.html
தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் மட்டுமே விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. அந்த வகையில் இந்த பயிற்சி வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. பெண்களுக்கு பிரசவம் முடிந்த பின்னர் ஏற்படும் தொப்பை குறைய இந்த பயிற்சியை செய்யலாம்.
ஆனால் சிசேரியன் செய்தவர்கள் குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்னர் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் தான் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்து கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கால்களை தரையில் இருந்து ஒரு அடி மேல் தூக்கவும்.
பின்னர் மெதுவாக முன்னோக்கி எழுந்து வலது காலை மட்டும் முட்டி வரை மடக்கி இடது கையால் வலது கால் முட்டியை தொட வேண்டும். இடது கால் தரையில் இருந்து ஒரு அடிக்கு மேலே (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும்.
இதே போல் கால்களை மாற்றி இடது, வலது என மாறி மாறி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது கால்களை தரையில் ஊன்ற கூடாது. இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி வயிற்று பகுதிக்கும், முதுகுக்கும் நல்ல வலிமை தருகிறது.
ஒரு மாதம் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலே நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி நன்கு பழகிய பின்னர் 40 முறை அல்லது அதற்கு மேலும் செய்யலாம். எந்த அளவுக்கு எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கிறோமோ அந்த அளவு பலன் தரக்கூடியது இந்த பயிற்சி.
Post a Comment