உட்டியாசனம் -- ஆசனம்!
...
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_25.html
இவ்வாசனம் மூச்சை வெளியில் முழுவதுமாக விட்டு, வயிற்றுப் பகுதியை எக்கிய நிலையில் செய்யும் ஆசனமாதலால் இப்பெயர் வழங்கலாயிற்று.
செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களைச் சற்று தளர்த்தி நிற்கவும். இடுப்பிற்கு மேல் உடம்பினைச் சற்று முன்னோக்கும் நிலையில் தாழ்த்த வேண்டும். இருக்கையின் பெருவிரல்களையும் தொடையின் மீது வைத்து, மாற்ற விரல்கள் தொடையின் கீழ்புறம் நோக்குமாறு அமைத்துக் கொள்ளவும்.
இந்த நிலையில் மூச்சினை முழுவதும் வெளியில் தள்ளி வயிற்றை எக்கி ஒட்டிய படி உள்ளிழுக்க வேண்டும். இந்நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.
பலன்கள்:
1.சிறுகுடல்,பெருங்குடல் நன்கு அழுத்தப் பெற்று புத்துணர்வு பெறுகின்றது.
2.சிறுநீரகம் நன்கு செயல்படுகிறது.
Post a Comment