மாங்காய் சாலட் --- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: பச்சை மாங்காய் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி - சிறிது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - 1 மஞ்சள் தூள...

பச்சை மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
• ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• பின்னர் அந்த நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
• பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
• அடுத்ததாக, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, இறுதியில் மேலே உப்பு தூவி பரிமாற வேண்டும்.
• இப்போது சுவையான மாங்காய் சாலட் ரெடி!!!
Post a Comment