வேப்பம்பூ பச்சடி:,,,,வேப்பம்பூ ரசம்:,,,,வேப்பம்பூ துவையல்.....: வேப்பம்பூ பொடி...
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து , நிழலில் உலர்த்தி வைத்து , அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் ...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_9.html
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
வேப்பம்பூ பச்சடி:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.
புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.
வேப்பம்பூ ரசம்:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
வேக வைத்த துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி(கரைத்துக் கொள்ளவும்)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புளியைக் கரைத்து, ரசப்பொடி கலந்து நன்றாக கொதிக்க விடவும். அதில் பருப்பு, தண்ணீரை சேர்த்து, வேப்பம்பூவை வதக்கி,அதில் கலந்து... பின்னர் தாளிக்கவும். உப்பு, பெருங்காயம் கலந்து இறக்கவும். இதை சாப்பாட்டிற்கு முன்னால் சூப்பாகவும் குடிக்கலாம்.
வாரம் ஒரு தடவை இந்த ரசத்தை நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் அழியும். பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
வேப்பம்பூ துவையல்:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 100 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் வேப்பம்பூ, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்தையும் நன்கு அரைத்து, பின்பு உளுத்தம்பருப்பை `நறநற'வென அரைத்துசுவையுங்கள். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வேப்பம்பூ பொடி...
தேவையான பொருட்கள்:
காய்ந்த வேப்பம்பூ - 200 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
கொத்தமல்லி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8
உப்பு, பெருங்காயப் பொடி - தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, அரைத்து பொடி செய்து கலந்து கொள்ளவும். சூடான சாதத்தில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி பொடியை தூவி, சிறிது நெய் கலந்து சாப்பிட்டால் பித்த நோய்களான வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை நீங்கும்.
வேப்பம்பூ உருண்டை...
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 2 மேஜைக்கரண்டி
வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு.
செய்முறை:
வேப்பம்பூவை சிறிது நெய் விட்டு வறுத்து, பொடியாக்கி, வெல்லத்துடன் சேர்த்து உருண்டை செய்து கொள்ளவும். வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்பூச்சி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். (வேப்பம்பூ பதப்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான கடைகளில் கிடைக்கும்

Post a Comment