இடுப்பு வலி, முதுகு வலி, பெண்களுக்கான மாத விலக்குப் பிரச்னை, வெள்ளைப் படுதல் ஆகியவற்றுக்கு வெந்தயக்களி,
வெந்தயக் களி தேவை: 500 கிராம் கைகுத்தல் புழுங்கல் அரிசி, 500 கிராம் கைகுத்தல் பச்சை அரிசி, 500 கிராம் தொலியுடன் கூடிய உளுந்து, 200 கிராம...
தேவை: 500 கிராம் கைகுத்தல் புழுங்கல் அரிசி, 500 கிராம் கைகுத்தல் பச்சை அரிசி, 500 கிராம் தொலியுடன் கூடிய உளுந்து, 200 கிராம் வெந்தயம், 2 கிலோ கருப்பட்டி, 1 கிலோ செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், 250 கிராம் சுக்கு, 50 கிராம் ஏலக்காய்.
அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 8 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை போதிய அளவு தண்ணீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதில் ஏலம் மற்றும் சுக்கைப் போட வேண்டும். பின்னர், அதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் அதனை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள மாவைப் போட்டு கிண்ட வேண்டும். பின்னர் இடைவெளிவிட்டு, விட்டு, நல்லெண்ணெயை விட்டுக் கிண்ட வேண்டும்.
இதையடுத்து, இறக்கிவைத்த பின்னர் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி கிண்டி பரிமாற வேண்டும்.
Post a Comment